cochin international airport old man incident police

'பாம்' என்ற வார்த்தையைச் சொன்ன முதியவர் கைது செய்யப்பட்டார்.

Advertisment

கேரள மாநிலத்தைச் சேர்ந்த 63 வயதான மம்மன் ஜோசப் என்ற முதியவர் தனது மனைவியுடன் ஆஸ்திரேலியா நாட்டில் வசிக்கும் மகளைப் பார்க்க செல்வதற்காக கொச்சி விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கு அவர் கொண்டு வந்த உடைமைகளை விமான நிலையத்தின் அதிகாரிகள் தொடர்ந்து பரிசோதித்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் எரிச்சல் அடைந்த அந்த முதியவர், தனது உடைமைகளில் 'பாம்' இருப்பதாக விமான நிலைய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

Advertisment

உடனடியாக, அந்த முதியவர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் அவரின் உடைமைகளை முழுவதுமாகப் பரிசோதித்து வெடிகுண்டு இல்லை என்று உறுதிசெய்தனர். அதைத் தொடர்ந்து, அந்த முதியவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.