தெலுங்கானாவில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்வில் பங்கேற்காமல் அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் புறக்கணித்துள்ளார்.
தமிழகத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிதமர் மோடி இன்று சென்னை வருகிறார். அதற்காக சென்னை உள்ளிட்ட முக்கிய இடங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி சென்னை வருவதற்கு முன்பு தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்திற்கு சென்று ரூ.11,300 கோடி மதிப்பிலான திட்டங்களைத்தொடங்கி வைக்கவுள்ளார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி பங்கேற்கும்அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் தெலுங்கானாமுதல்வர் சந்திரசேகர ராவ் புறக்கணித்துள்ளார். இது முதல் முறையல்ல, பல முறை பிரதமர் மோடி தெலுங்கானாசென்றபோது சந்திரசேகர ராவ் அவரை சந்திக்காமல் புறக்கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.