Class 12 CBSE general exams canceled

12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Advertisment

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தீவிர தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி போடும் பணிகள் ஆகியவை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதேபோல் பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுமாஅல்லது ரத்து செய்யப்படுமா என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மாணவர்களின் உடல் நலனில் அக்கறை கொண்டு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Advertisment

12 ஆம் வகுப்பு தேர்வு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளை நடத்துவது தொடர்பாக பிரதமர் மோடி டெல்லியில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.