/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rangasamy323232.jpg)
என்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், புதுச்சேரி மாநில முதலமைச்சருமான ரங்கசாமியின் பிறந்தநாளையொட்டி, வாழ்த்துத் தெரிவிப்பதற்காக ஏராளமானோர் அவரது வீட்டில் குவிந்தனர். புதுச்சேரி நகர் முழுவதும் அவரின் பிறந்தநாளை, அவரது ஆதரவாளர்கள், கட்சியின் தொண்டர்கள் உள்ளிட்டோர் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.
பொன்னியின் செல்வன், விக்ரம், புஷ்பா திரைப்பட ஹீரோக்கள் ஸ்டைலில் முதலமைச்சர் ரங்கசாமியின் படங்களை பேனர்களாக வைத்து அசத்தியுள்ளனர்.
பிறந்தநாளையொட்டி, சேலம் மாவட்டத்தில் உள்ள அப்பா பைத்தியம் சாமி கோயிலுக்கு சென்று வழிபட்ட முதலமைச்சர் ரங்கசாமி, அங்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதங்களை வழங்கினார். புதுச்சேரி மாநில அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் முதலமைச்சர் ரங்கசாமியை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.
அதேபோல், தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை பொறுப்பு ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், புதுவை முதலமைச்சர் அண்ணன் ந.ரங்கசாமி அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)