Chief Minister Stalin met US President Joe Biden at g20 summit

இந்தியா தலைமையில், டெல்லியில் நேற்றும், இன்றும் என இரு நாட்கள் டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் ஜி20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர். மாநாட்டில் கலந்துகொள்ள வருகை தந்த சர்வதேச தலைவர்களுக்குப் புகழ்பெற்ற கோனார்க் சக்கரம் பின்னணியில் இருக்கும்படி சிவப்புக் கம்பளத்தில் நின்று பிரதமர் மோடி உற்சாக வரவேற்பு அளித்தார். மொரோக்கோ நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு ஜி 20 மாநாட்டில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் நாட்டின் பெயரைக் குறிக்க பிரதமர் மோடியின் முன்பாக வைக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகையில் இந்தியா என்பதற்குப் பதிலாக ‘பாரத்’ என இடம்பெற்றது.

Advertisment

நேற்றைய ஜி 20 மாநாட்டில் கூட்டறிக்கைக்கு உலக தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். அத்தோடு, உக்ரைன்-ரஷ்யா போருக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும், பொருளாதார வளர்ச்சிக்கான முடிவுகள் எடுக்கும் இடத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொண்டு வர வேண்டும், 2030க்குள் பசுமை இல்ல வாயுக்கள் வெளியிடுதல் 43 சதவீதம் அளவுக்கு குறைக்க கவனம் செலுத்த வேண்டும் என பல முக்கியமான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.

Advertisment

இதனைத் தொடர்ந்து நேற்று இரவு, உலக தலைவர்களுக்கு டெல்லியில் குடியரசுத்தலைவர் விருந்தளித்தார். மேலும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியாவில் உள்ள மாநில முதல்வர்கள், மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன் பேரில் தமிழக முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்றிருந்தார். அப்போது நேற்று இரவு நடந்த விருந்தில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலினை,பிரதமர் மோடி அமெரிக்கஅதிபர் ஜோ பைடனிடம் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது இருவரும் கைகுலுக்கிக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தளப்பக்கமானட்விட்டரில்முதல்வர் ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.