Skip to main content

முதல்வர் மு.க. ஸ்டாலின் டெல்லி பயணம்

Published on 09/09/2023 | Edited on 09/09/2023

 

Chief Minister M. K. Stalin's visit to Delhi
கோப்புப்படம்

 

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஜி20 உச்சி மாநாட்டையொட்டி டெல்லியில் நடைபெறும் சிறப்பு விருந்தில் கலந்துகொள்ள டெல்லி சென்றுள்ளார்.

 

டெல்லியில் இன்றும், நாளையும் என இரு நாட்கள் டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் ஜி20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர். மாநாட்டில் கலந்துகொள்ள வருகை தந்த சர்வதேசத் தலைவர்களை, புகழ்பெற்ற கோனார்க் சக்கரம் பின்னணியில் இருக்கும்படி சிவப்புக் கம்பளத்தில் நின்று பிரதமர் மோடி உற்சாக வரவேற்பு அளித்தார்.

 

இந்நிலையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ள டெல்லிக்கு வருகை தந்துள்ள சர்வதேசத் தலைவர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் மாநில முதல்வர்களுக்கு இன்று சிறப்பு விருந்து அளிக்கிறார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் இந்த விருந்தில் கலந்துகொள்ளத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் டெல்லி சென்றடைந்தார். 

 

 

சார்ந்த செய்திகள்