தேர்தல்களின் வாக்களித்ததற்காக 100 வயதைத் தாண்டிய 2.5 லட்சம் முதியவர்களுக்கு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், கடிதம் மூலம் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
உங்களைப் போன்ற பொறுப்பு மிக்க குடிமகன்களால் தான் இந்திய ஜனநாயகம் உயிர்ப்புடன் உள்ளதாகவும், உலக அளவில் பிற நாடுகளை விட சிறந்து விளங்குவதாகவும், தனது கடிதத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் எழுதிய கடிதம், அனைத்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு, அந்தந்த வாக்காளர்களின் வீடுகளுக்கு அதிகாரிகள் மூலம் நேரடியாகக் கொண்டு சென்று தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.