kirenjpg

இலங்கையிலிருந்து வந்த அகதிகள் என்பதற்கு பதில் தமிகழத்திலிருந்து வந்த அகிதகள் எனக்கூறிய மத்திய அமைச்சரால் மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டது.

Advertisment

தற்போது நடந்து வரும் மழைக்கால கூட்டத்தொடரின், இன்றைய கூட்டத்தில், ஏந்தெந்த நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அகதிகள் வந்துள்ளனர் என்ற கேள்விக்கு, மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு பதிலளித்தார்.

Advertisment

அப்போது, இலங்கையிலிருந்து வந்த அகதிகள் என்பதற்கு பதில் தமிகழத்திலிருந்து வந்த அகிதகள் எனக்கூறினார். இதனால் பல்வேறு கட்சி உறுப்பினர்களும் கிரண் ரிஜிஜு பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் அமளியில் ஈடுபட்டனர்.

எம்பிக்களின் கடும் எதிர்ப்பை அடுத்து தன்னுடைய அறிக்கையை திருத்திக்கொள்வதாக கிரண் ரிஜிஜூ கூறினார்.

Advertisment