narendra singh tomar

Advertisment

மத்திய அரசின்வேளாண் சட்டங்களுக்கு எதிராகவிவசாயிகள், இரண்டு மாதங்களுக்கு மேலாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுக்கும்விவசாயிகளுக்கும் இடையே நடைபெற்றபேச்சுவார்த்தைகள் பலனளிக்காத நிலையில், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாதவரை, வீடு திரும்புவதில்லை என்ற முடிவில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர்.

இந்த நிலையில் வேளாண் சட்டங்கள் தொடர்பான சந்தேகத்தைத் தீர்க்க, வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதிலிருந்து 8 கோடிரூபாய் செலவு செய்ததாகமத்திய அரசு தெரிவித்துள்ளது.

வேளாண் சட்டங்கள் தொடர்பான கேள்விக்கு, மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங்தோமர், விவசாயசட்டங்கள் தொடர்பான தொடர் பிரச்சனைகளுக்கு விளக்கமளிக்கும் வகையில், விளம்பரங்களுக்கு 8 கோடிரூபாய் செலவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.