டிக்டாக் உள்ளிட்ட சீன நிறுவனங்களின் 59 செல்போன் செயலிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. சீன நிறுவனத்தின் டிக்டாக், விசாட்,யூசி ப்ரவுசர், ஹலோ, ஷேரிட்என இந்தியாவில் அதிகம் பயன்படுத்தும் சீன செயலிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி தடை விதித்துள்ளது.
இந்திய, சீன எல்லையானலடாக்கில் எல்லைதொடர்பான பிரச்சனைகள் தொடர்ந்து வரும் நிலையில், செயலிகள் மூலம் இந்தியா தொடர்பான தகவல்களை சீனா பெறுவதாக எழுந்த சர்ச்சையை அடுத்து தற்போது மத்திய உள்துறை அமைச்சகம் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும்தகவல்கள் தெரிவிக்கிறது.