இந்தியாவில்கரோனாதடுப்பூசி செலுத்தும் பணிகள், கடந்த ஜனவரி16 ஆம் தேதி ஆரம்பித்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சுகாதாரப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, அவர்களுக்குத் தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டு வரும் நிலையில், இரண்டாவது டோஸ் தடுப்பூசிசெலுத்தும் பணிகள்பிப்ரவரி13 முதல் தொடங்கும்எனஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இன்று, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், இந்தியா முழுவதுமுள்ள மாநில, யூனியன் பிரதேச சுகாதாரத்துறை செயலாளர்கள் மற்றும் தேசிய சுகாதாரத் திட்ட இயக்குனர்களுடன், காணொலிவாயிலாக கரோனாதடுப்பூசிசெலுத்தும் பணியின் நிலையையும் அதன்முன்னேற்றத்தையும் ஆய்வுசெய்தார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் தடுப்பூசிசெலுத்தும் பணியின்வேகத்தை அதிகரிக்குமாறு, மாநிலங்கள்மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், 12 மாநிலங்கள்மற்றும் யூனியன் பிரதேசங்களில் 60 சதவீதம்அல்லது அதற்குமேற்பட்டசுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனாதடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.