Skip to main content

மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை!

Published on 13/06/2024 | Edited on 13/06/2024
Central cabinet urgent consultation

குவைத் நாட்டில் மங்காப் என்ற பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் நேற்று (12.06.2024) அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விபத்து நிகழ்ந்த கட்டடத்திலிருந்த 195 பேரில் 175 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலும் வெளியானது. இந்த தீ விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. மலையாள மக்கள் அதிகம் வசிக்கும் இடத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் தமிழர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் ஏற்பட்ட மீட்புப் பணிகள் நடைபெற்றன. அதே சமயம் தீ விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தீ விபத்தில் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. தென்னவனூர் பகுதியைச் சேர்ந்த கருப்பண்ணன் ராமு என்பவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். முன்னதாக குவைத் தீ விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்திருக்கக் கூடும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியைச் சேர்ந்த ரிச்சர்ட் ராய் என்பவரின் நிலை குறித்தும் தெரியவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இவர் அங்குள்ள தரக் கட்டுப்பாட்டு அலுவலராக பணிபுரிந்து வருகிறார். 

Central cabinet urgent consultation

இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. பிரதமர் மோடி, ஜி - 7 மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று (13.06.2024) இத்தாலி செல்கிறார் இதற்கு முன்பாக இந்தக் கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. உயிரிழந்த இந்தியர்களின் உடல்களை அடையாளம் காண டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் உடல்களை இந்தியா கொண்டு வர இந்திய விமானப் படை விமானம் குவைத் விரைகிறது. முன்னதாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர்  கீர்த்திவர்தன் சிங் குவைத் விரைந்துள்ளார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“ரயில் விபத்திற்கு மோடி அரசு பொறுப்பு ஏற்க வேண்டும்” - காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தல்!

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
Modi govt should take responsibility for the train incident Congress leaders insist

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள பனிஷ்தேவா பகுதியில் இன்று (17.06.2024) காலை 9 மணியளவில் சீல்டா - கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ரயில் சீல்டா - கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது மோதியது. இந்த ரயில் விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாகவும், 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகி இருந்தது.

சரக்கு ரயில் மோதியதில் பயணிகள் ரயிலின் கடைசி மூன்று பெட்டிகள் முழுவதுமாக சீர்குலைந்துள்ளன. அதிலும் குறிப்பாக எக்ஸ்பிரஸ் ரயிலின் கடைசிப் பெட்டி தூக்கி வீசப்பட்டது. இதனையடுத்து இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. ரயில் விபத்து நடந்த இடத்தை பார்வையிட மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டார்ஜிலிங் செல்கிறார். விபத்து நடந்த இடத்தில், டார்ஜிலிங் எம்.பி., ராஜு பிஸ்டா நேரில் பார்வையிட்டார். 

Modi govt should take responsibility for the train incident Congress leaders insist

இந்நிலையில் இந்த ரயில் விபத்து சம்பவத்திற்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மேற்கு வங்கத்தில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் விபத்தில் பலர் உயிரிழந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. உயிர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று விரும்புகிறேன். பாதிக்கப்பட்ட அனைவருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் அரசு உடனடியாக முழு இழப்பீடு வழங்க வேண்டும். நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் காங்கிரஸ் தொண்டர்கள் அனைத்து உதவிகளையும் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்துள்ள ரயில் விபத்துகள் மோடி அரசின் தவறான நிர்வாகத்தின் மற்றும் புறக்கணிப்பின் நேரடி விளைவாகும், இதனால் ஒவ்வொரு நாளும் பயணிகளின் உயிர் மற்றும் உடைமைகளில் இழப்பு ஏற்படுகிறது. பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற வகையில், இந்தப் பயங்கரமான அலட்சியத்தை நாங்கள் தொடர்ந்து கேள்வி எழுப்புவோம். இந்த விபத்துக்களுக்கு மோடி அரசாங்கத்தை பொறுப்பேற்கச் செய்வோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Modi govt should take responsibility for the train incident Congress leaders insist

மேலும் இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரியில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர். விபத்து காட்சிகள் வேதனை அளிக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள். இந்தத் துயர நேரத்தில், அவர்கள் ஒவ்வொருவருக்கும் எங்கள் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முழுமையான இழப்பீடு வழங்க வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளில், ரயில்வே அமைச்சகத்தின் தவறான நிர்வாகத்தில் மோடி அரசு ஈடுபட்டுள்ளது. ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக, மோடி அரசு ரயில்வே அமைச்சகத்தை எப்படி  கேமராவால் இயக்கப்படும் சுயவிளம்பர மேடையாக மாற்றியுள்ளது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுவது நமது கடமையாகும். மேலும் இந்திய ரயில்வேயைக் கைவிட்டதற்கு மோடி அரசாங்கத்தை பொறுப்பேற்கச் செய்வோம்’ எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

ரயில் விபத்து; பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு!

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
west bengal kanchenjunga express incident PM Modi relief announcement

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள பனிஷ்தேவா பகுதியில் இன்று (17.06.2024) காலை 9 மணியளவில் சீல்டா - கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ரயில் சீல்டா - கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இந்த ரயில் விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாகவும், 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. சரக்கு ரயில் மோதியதில் பயணிகள் ரயிலின் கடைசி மூன்று பெட்டிகள் முழுவதுமாக சீர்குலைந்துள்ளன. அதிலும் குறிப்பாக எக்ஸ்பிரஸ் ரயிலின் கடைசிப் பெட்டி தூக்கி வீசப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் ரயில் பயணிகள் மற்றும் பொது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய சூழலில் இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. ரயில் விபத்து நடந்த இடத்தை பார்வையிட மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டார்ஜிலிங் செல்கிறார். விபத்து நடந்த இடத்தில், டார்ஜிலிங் எம்.பி., ராஜு பிஸ்டா நேரில் பார்வையிட்டார். 

west bengal kanchenjunga express incident PM Modi relief announcement
ஜெய வர்ம சின்ஹா

இந்த விபத்து குறித்து ரயில்வே வாரியத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜெய வர்ம சின்ஹா ​​கூறுகையில், “காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து தொடர்பான மீட்புப் பணிகள் நிறைவடைந்தன. இந்த சம்பவத்தில் சரக்கு ரயிலின் ஓட்டுநர், உதவி ஓட்டுநர் மற்றும் காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலின் காவலாளி (guard) ஆகியோர் உயிரிழந்துள்ளனர். சரக்கு ரயில் ஓட்டுநர் சிக்னலை மீறியதாக தெரியவருகிறது. அகர்தலா - சீல்டா வழித்தடத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது எக்ஸ் வலைத்தளப் பதிவில், “மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் ரயில் விபத்தில் பயணிகள் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் துயரமடைந்த குடும்பத்தினருடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், நிவாரணம் கிடைக்கவும் பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

 west bengal kanchenjunga express incident PM Modi relief announcement

அதே சமயம் ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் எனப் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அதோடு ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறுகையில், “ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும். இந்த விபத்தில் மரணமடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சம், கடுமையான படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.2.5 லட்சம் மற்றும் சிறிய காயங்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.