மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் மக்களவை தேர்தலில் 28 வயதான பாஜக இளைஞர் அணியின் செயலாளராக உள்ள தேஜஸ்வி சூர்யா பெங்களூர் தெற்கு மக்களவை தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் பிரச்சார கூட்டங்கள் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், "மோடியை ஆதரிக்காதவர்கள் அனைவரும் தேசத்திற்கு எதிரானவர்கள் (ஆன்டி இந்தியன்) என கூறினார். இதனையடுத்து அவர் வாறு கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் தேஜஸ்வி சூர்யா மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.