Skip to main content

காரும் பஸ்ஸும் நேருக்கு நேர் மோதி விபத்து; 9 பேர் உயிரிழப்பு

 

car and a bus collide head-on in Gujarat

 

குஜராத்தில் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே 9 பேர் உயிரிழந்துள்ளனர். 

 

குஜராத் மாநிலம் நவ்சாரி மாவட்டத்தில் மும்பை - அகமதாபாத் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று எதிரே வந்த கார் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் காரில் பயணித்த 9 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், பேருந்தில் பயணித்த 28 பேர் காயமடைந்தனர். அதில் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

 

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பேருந்து ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது. மேலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !