/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/CFREW.jpg)
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் கடந்த 08/12/2021 அன்று பிற்பகல் நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பிபின் ராவத்தோடு பயணித்த அவரது மனைவி மதுலிகா ராவத், 11 இராணுவ அதிகாரிகளும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த விபத்தில் சிக்கிய கேப்டன் வருண் சிங் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். அவர் தற்போது பெங்களூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் பூரண உடல்நலம்பெற்று மீள வேண்டும் என நாடு முழுவதும் உள்ளமக்கள் பிரார்த்தித்து வருகிறார்கள்.
இந்தநிலையில்ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் பேசியுள்ள இந்திய விமானப்படை அதிகாரிகள், வருண் சிங்கின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தாலும் சீராக இருப்பதாகத்தெரிவித்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)