Skip to main content

கோடிக்கணக்கில் கடன் வாங்கிவிட்டு பிரபல தொழிலதிபர் நாட்டை விட்டு ஓட்டம்...

Published on 03/07/2020 | Edited on 03/07/2020

 

businessman flees from country after defruding banks

 

கனரா வங்கி உள்ளிட்ட ஆறு வங்கிகளில் ரூ. 350 கோடிக்கு மேல் கடன் பெற்று, அதனைத் திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றுள்ளார் 'பஞ்சாப் பாஸ்மதி ரைஸ்' லிமிடெட் நிறுவன இயக்குநரான மஞ்ஜித் சிங் மக்னி.

 

பஞ்சாப் பாஸ்மதி ரைஸ் லிமிடெட் நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள் மஞ்சித் சிங் மக்னி, அவரது மகன் குல்விந்தர் சிங் மக்னி, அவரது மருமகள் ஜஸ்மீத் கவுர் மற்றும் சில அரசு ஊழியர்கள் ஆகியோர் இணைந்து ஆறு வங்கிகளிலும் மோசடி செய்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. கனரா வங்கியின் ரூ .517 கோடி, ஆந்திர வங்கியின் ரூ .53 கோடி, யுபிஐ -யில் ரூ .44  கோடி, ஓ.பி.சி.-யில் ரூ .25 கோடி, ஐ.டி.பி.ஐ. -யில் ரூ .14 கோடி மற்றும் யூகோ வங்கியில் ரூ .41 கோடி என்கிற அளவில் இவர்கள் மோசடி செய்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் அந்நிறுவனம் கடன் வசதிகளைப் பெற்றுள்ளதாகக் கனரா வங்கி தனது புகாரில் தெரிவித்துள்ளது.

 

இந்த மோசடி குறித்து 2019 மார்ச் 11 அன்று இந்திய ரிசர்வ் வங்கியில் புகாரளிக்கப்பட்டபோது, 2019 மார்ச் 30க்குள் சி.பி.ஐ.-க்கு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது. ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சி.பி.ஐ.-இல் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய , வங்கி 15 மாதங்கள் எடுத்துக்கொண்டுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் கடன்பெற்று மோசடி செய்த மஞ்ஜித் சிங் மக்னி 2018 ஆம் ஆண்டே நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதாகவும். இப்போது அவர் கனடாவில் வசிக்கலாம் என்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"ஓய்வு பெற்றும் நிம்மதி இல்லை"... முன்னாள் ஊழியர்களின் போராட்டம்....

Published on 19/02/2020 | Edited on 19/02/2020

பணியில் இருக்கும் வரை காலம் போவதே தெரிவதில்லை. ஆனால் ஒய்வு பெற்ற பிறகு ...? முறையாக கிடைக்க வேண்டிய உதவிகள், பண பலன்களை கேட்டு நடையாய் நடப்பது மட்டுமல்ல போராட்டத்திலும் ஈடுபட வேண்டியிருக்கிறது என வேதனையுடன் தெரிவிக்கிறார்கள் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்கள்.

 

canara bank ex employees rally at erode

 

 

ஈரோடு மாவட்டத்தில்  ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்கள்  சங்கத்தின் சார்பில் இன்று  ஈரோடு கனரா வங்கி பிரதான கிளை முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாலசுப்பிரமணியன், பாஸ்கரன் ஆகியோர் தலைமை தாங்க சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய கனரா வங்கி ஓய்வு பெற்றோர் சம்மேளனத்தின் உதவி தலைவர் காசிவிஸ்வநாதன் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தினை துவக்கி வைத்தார்.

ஆர்ப்பாட்டத்தில் ஒய்வு பெற்றோருக்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியத்தை உயர்த்தி தர வேண்டும், 2002ம்ஆண்டு முன்னர் ஒய்வு பெற்ற அனைவருக்கும் 100 சதவீத பஞ்சப்படி வழங்க வேண்டும், அனைத்து வங்கிகளிலும் ஓய்வு பெற்றோர் நலனுக்காக தனியான ஊழியர் நலத்தொகை ஒதுக்கப்பட வேண்டும், ஓய்வூதியோர் குறைகளை தீர்க்க ஒரு உயர்மட்ட தீர்ப்பாயம் அமைக்க வேண்டும், அதே போல்  வங்கிகளில் ஓய்வு பெற்றோருக்கு மருத்துவ காப்பீட்டு மற்றும் மருத்துவமனை கட்டணத்தை வங்கிகளே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பன  பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் சங்க நிர்வாகிகள், ஓய்வு பெற்ற  பலரும் கலந்து கொண்டனர். ஓய்வு பெற்றும் நிம்மதியில்லாமல் போராட வேண்டியிருக்கிறது.

 

 

Next Story

வங்கிக்குள் நுழைந்து ரூபாய் 50 ஆயிரம் திருடிய பெண்!

Published on 13/11/2019 | Edited on 13/11/2019

வேலூர் மாவட்டம் ஆம்பூர் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் விஜயா. கணவனை இழந்த இவர் தனது பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் தான் வைத்திருந்த ரூபாய் 1 லட்சத்தை தனது பெயரில் உள்ள வங்கி சேமிப்பு கணக்கில் செலுத்துவதற்காக ஆம்பூர் பஜார் பகுதியில் உள்ள கனரா வங்கிற்கு வந்துள்ளார்.
 

அந்த வங்கி கிளையில் 50,000 ரூபாயை கட்டிவிட்டு மீதி வைத்திருந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கைப்பையில் வைத்திருந்துள்ளார். கனரா வங்கியில் பணம் கட்டியதை தனது வங்கி கணக்கு புத்தகத்தில் தானியாங்கி மிஷினில் பதிவிடுவதற்காக வங்கியில் உள்ள இயந்திரம் முன் வரிசையில் நின்றுள்ளார்.

vellore district ambur vanara bank branch lady thief  police



சிறிது நேரம் பொறுத்து தனது பையை பார்த்த போது, அதில் வைத்திருந்த பணம் 50 ஆயிரம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அங்கேயே அழுது புலம்பியவர். இது குறித்து வங்கி மேலாளர் மற்றும் நகர காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் வங்கி வளாகத்திற்கு வந்த காவல்துறையினர் விஜயாவிடம் விசாரித்தபோது, 50 ஆயிரம் ரூபாய் இந்தியன் வங்கியில் தனது பெயரில் உள்ள கணக்கில் கட்டுவதற்காக வைத்திருந்ததாக கூறியுள்ளார். பின்னர் வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். 
 

அதில் வங்கி கணக்கு புத்தகம் அச்சிடும் இயந்திரம் முன் வரிசையில் நின்றுக்கொண்டிருந்த விஜயாவின் பின்புறம் ஓர் பெண் வந்து நின்று கொண்டு சுற்றும் பார்த்து, எவருக்கும் தெரியாத வகையில் விஜயா வைத்திருந்த பையில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுள்ள காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. சம்பவம் குறித்து ஆம்பூர்  நகர போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை வைத்து பணம் கொள்ளையடித்து சென்ற பெண்ணை தேடி வருகின்றனர்.

 

கடந்த 16.09.2019 ஆம் தேதி இதே வங்கியின் முன் இருசக்கர வாகனத்தில் பணம் எடுத்த வந்த பெண்ணை திசை திருப்பி நூதன முறையில் 35 சவரன் நகை மற்றும் 45 ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு மாதத்திற்கு பிறகு தற்போது வங்கிக்குள்ளேயே கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது என்பது வங்கி நிர்வாகத்தை மட்டுமல்ல, வாடிக்கையாளர்களையும், அதிர்ச்சியடைய வைத்துள்ளது.