Skip to main content

பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்து விபத்து; 15 பேர் உயிரிழப்பு

Published on 09/05/2023 | Edited on 09/05/2023

 

nn

 

பயணிகளுடன் பாலத்தின் மேல் சென்று கொண்டிருந்த பேருந்து நிலை தடுமாறி பாலத்தின் தடுப்புகளை உடைத்துக் கொண்டு கீழே விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்தது மத்தியப்பிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

மத்தியப்பிரதேச மாநிலம் கார்கோன் என்ற இடத்தில் பாலத்தில் பயணிகளுடன் பேருந்து சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பாலத்தின் தடுப்புச் சுவர்களை உடைத்துக் கொண்டு கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்திலிருந்த 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 25 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

 

பாலத்திலிருந்து பேருந்து விழுந்து 15 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள மத்தியப்பிரதேச அரசு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது. மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு 25,000 ரூபாயும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

3 மாநிலங்களில் பாஜக- தெலுங்கானாவில் 'கை' பதித்த காங்கிரஸ்

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

BJP in 3 states - Congress in Telangana

 

தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டங்களாக தேர்தல்கள் நடந்து முடிந்தது. தொடர்ந்து தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகி இருந்தது. இந்நிலையில் மிசோரத்தை தவிர்த்து மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

 

முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் காலை 11.30 மணி நிலவரப்படி தெலுங்கானாவில் 66 இடங்களில் காங்கிரஸ் முன்னிலையிலும், பிஆர்எஸ் 41 இடங்களிலும், பாஜக 9 இடங்களிலும், மற்றவை 3 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

 

மத்தியப் பிரதேசத்தில் பாஜக 162 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், காங்கிரஸ் 65 இடங்களிலும் மற்றவை 3 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. ராஜஸ்தானில் பாஜக 107 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், காங்கிரஸ் 75 இடங்களிலும், மற்றவை 17 இடங்களில் முன்னிலையில் உள்ளது. சத்தீஸ்கரில் 53 இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ள நிலையில் காங்கிரஸ் 35 இடங்களிலும் மற்றவை  2 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. நாளை மிசோரம் மாநில வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

 

தற்போதைய நிலவரப்படி மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பெரும்பான்மை தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிப்பதால் அந்த மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில பாஜக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் தெலுங்கானாவில் காங்கிரஸ் பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்று வருவதால் முதன்முதலாக தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க இருக்கிறது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

எதிர்பார்ப்பை எகிற வைக்கும் தேர்தல் முடிவுகள்; வெளியான முன்னிலை நிலவரம்

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

nn

 

தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டமாக தேர்தல்கள் நடந்து முடிந்தது. தொடர்ந்து தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகி இருந்தது. இந்நிலையில் மிசோரத்தை தவிர்த்து மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

 

முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் காலை 10 மணி நிலவரப்படி தெலுங்கானாவில் 68 இடங்களில் காங்கிரஸ் முன்னிலையிலும், பிஆர்எஸ் 40 இடங்களிலும், பாஜக  7 இடங்களிலும், மற்றவை 4 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

 

மத்தியப் பிரதேசத்தில் பாஜக 125 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், காங்கிரஸ் 76 இடங்களிலும் மற்றவை 2 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. ராஜஸ்தானில் பாஜக 102 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில், காங்கிரஸ் 82 இடங்களிலும், மற்றவை 15 இடங்களில் முன்னிலையில் உள்ளது. சத்தீஸ்கரில் 52 இடங்களில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ள நிலையில் பாஜக 38 இடங்களில் முன்னணியில் உள்ளது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்