Skip to main content

மத்திய பட்ஜெட் 2019 இடம் பெற்றுள்ள அம்சங்கள்.. சிறப்பு தொகுப்பு!

Published on 05/07/2019 | Edited on 05/07/2019

நாடு முழுவதும் புதியதாக நான்கு வெளிநாட்டு தூதரகங்கள் அமைக்கப்படும். நாடு முழுவதும் 17 சுற்றுலா தளங்கள் உலக தரத்திற்கு உயர்த்தப்படும். என்ஆர்ஐ-கள் இந்தியா வந்த உடனேயே ஆதார் அட்டை வழங்கப்படும்; 180 நாட்கள் காத்திருப்பு தேவையில்லை. பார்வையற்றோரும் தெரிந்துக்கொள்ளும் வகையில் ரூபாய் 1, 2, 5,10,20 நாணயங்கள் வெளியிடப்படும். வங்கிகளின் வாராக்கடன் ரூபாய் 1 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. பொதுத்துறை வங்கிகள் கடன் வழங்குவதற்காக ரூ.70,000 கோடி நிதி வழங்கப்படும். முத்ரா தொழில் கடன் திட்டத்தின் கீழ்  ஓவ்வொரு சுய உதவிக் குழுவிலும் ஒரு பெண்ணுக்கு ரூ.1 லட்சம் கடன் உதவி வழங்கப்படும்.

 

 

 

budget for new india budget 2019 minister nirmala sitharaman said about tax offer

 

 

 

தனியார் மற்றும் அரசு பங்களிப்புடன் மகளிர் மேம்பாட்டு திட்டங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.  மின்சாரம் வீணடிக்கப்படுவதை தவிர்க்க 25 கோடி எல்இடி பல்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் காரணமாக சுமார் ரூபாய் 18,341 கோடி மிச்சப்படுத்தப்படுள்ளது. வீட்டுக்கடன் நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும். பொறுப்பாக வரி செலுத்துவோர்களுக்கு நன்றி தெரிவித்தார் அமைச்சர் நிர்மலா சீதாராமன். மத்திய அரசின் நேரடி வருவாய் சுமார் ரூபாய் 11.37 லட்சம் கோடியாக உயர்வு. மின்சார வாகனங்களை வாங்குவோர்களுக்கு வரிச்சலுகை அறிவிப்பு.

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்!

Published on 24/07/2024 | Edited on 24/07/2024
India coalition MPs are struggling in the Parliament complex

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் (22.07.2024) தொடங்கியது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை மொத்தம் 19 அமர்வுகளுடன் நடைபெறவுள்ளது. இதன் ஒரு பகுதியாக 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (23.07.2024) காலை 11 மணிக்கு தாக்கல் செய்து உரை நிகழ்த்தினார்.

அதில் பல்வேறு அறிவிப்புகள்  வெளியாகி இருந்தன. அதே சமயம் மத்திய அரசின் பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்ட இந்த பட்ஜெட் பாரபட்சமானது என ஒரு நாடாளுமன்ற வளாகத்தில் இந்திய கூட்டணி எம்பிக்கள் போராட்டம் நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே இல்லத்தில் நடைபெற்ற இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. 

India coalition MPs are struggling in the Parliament complex

இந்நிலையில் மத்திய பட்ஜெட்டில் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு எந்த திட்டமும் அறிவிக்காததை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சி எம்பி ஜெயா பச்சன், திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி டெரெக் ஓ பிரையன், எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறுகையில், “இந்த பட்ஜெட் பாரபட்சமானது. இது ஆட்சியின் நாற்காலியை காப்பாற்றும் (குர்சி பச்சாவ்) பட்ஜெட் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த அரசை எப்படி காப்பாற்றுவது என்பது பற்றி மட்டுமே இந்த பட்ஜெட் யோசித்துள்ளது. நடுத்தர மக்களையும், விவசாயிகளையும், தொழிலாளர்களையும் தண்டித்ததுதான் இந்த பட்ஜெட் உச்சக்கட்டம் ஆகும். இது இந்த நாட்டின் கூட்டாட்சிக் கொள்கைகளுக்கு எதிரானது. மத்திய அரசின் எந்த உதவியும் இல்லாமல் பல மாநிலங்கள் தவிக்கின்றன. அதனால்தான் இந்தியக் கூட்டணித் தலைவர்கள்  போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர் எங்கள் அதிருப்தியைக் காட்டவும், பாகுபாட்டை நிறுத்தவும் பாராளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்துகின்றனர்” எனத் தெரிவித்தார். 

Next Story

மத்திய பட்ஜெட்; மொரார்ஜி தேசாய் சாதனையை முறியடிக்கும் நிர்மலா சீதாராமன்!

Published on 23/07/2024 | Edited on 23/07/2024
Central Budget; Nirmala Sitharaman to break Morarji Desai's record

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (22.07.2024) தொடங்கியது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை மொத்தம் 19 அமர்வுகளுடன் நடைபெறவுள்ளது. இதன் ஒரு பகுதியாக மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். கடந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து விளக்கும் ஆய்வறிக்கை இதுவாகும்.

இந்நிலையில் 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (23.07.2024) தாக்கல் செய்கிறார். பிரதமராக மோடி 3வது முறை பதவியேற்ற பின் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவாகும். எனவே இந்த பட்ஜெட்டில் தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கான வரிச்சலுகைகள், புதிய அறிவிப்புகள் இடம் பெறுமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Central Budget; Nirmala Sitharaman to break Morarji Desai's record

அதே சமயம் தொடர்ச்சியாக 7 வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து மொரார்ஜி தேசாயின் சாதனையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று முறியடிக்க உள்ளார். இதுவரை தொடர்ச்சியாக 5 முறை முழு பட்ஜெட்டும், ஒருமுறை இடைக்கால பட்ஜெட்டும் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் 6 முறை தொடர்ச்சியாகவும், ஒட்டுமொத்தமாக 10 முறையும் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான பிப்ரவரி 1 ஆம் தேதி (01.02.2024) மத்திய அரசின் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதே சமயம் இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற இருந்த காரணத்தால் அப்போது முழு பட்ஜெட்டாக இல்லாமல் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும் கவனிக்கத்தக்கது.