Skip to main content

வெறும் 49 ரூபாய்க்கு சேவைகளை அள்ளித்தரும் பி.எஸ்.என்.எல்... புது அறிவிப்பு!!!

Published on 10/09/2020 | Edited on 10/09/2020

 

bsnl

 

இந்தியாவின் பிரதான தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. பல புதிய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வருகை மற்றும் அவர்களது விலை குறைவான அதிரடி சலுகை அறிவிப்புகள், பயனாளர்களை அவர்கள் பக்கம் இழுத்து வருகிறது. இதனால் புதிய பயனாளர்களைத் தன் பக்கம் கவர்வதும், ஏற்கனவே உள்ள பயனாளர்களைத் தக்க வைப்பதும் பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்குப் பெரும் சவாலாக உள்ளது. இதனால் அந்நிறுவனமும் தற்போது இதுபோன்ற விலை குறைவான அதிரடி அறிவிப்புகளை வெளியிட ஆரம்பித்துள்ளன. அந்த வகையில் 49ரூபாய் விலையில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

 

அதன்படி 49 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யும் போது தினமும் 2ஜிபி டேட்டாவும், 100 நிமிடங்களுக்கான இலவச வாய்ஸ்கால் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. 100 நிமிடங்களைத் தாண்டும் போது நிமிடத்திற்கு 45 பைசா கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் தினந்தோறும் 100 குறுஞ்செய்திகளை இலவசமாக அனுப்பும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மொத்த கால அளவு 28 நாட்கள் ஆகும்.

 

இச்சலுகை அறிவிப்பானது நவம்பர் 29- ஆம் தேதி வரை பொருந்தும். ஆன்லைன் ரீசார்ஜ் மற்றும் வெளிக்கடைகள் மூலம் இந்த ப்ளானை ஆக்டிவேட் செய்து கொள்ளலாம் அல்லது இந்த ப்ளானை STV COMBO49  என டைப் செய்து 123 என்ற எண்ணிற்கு மெசேஜ் அனுப்பி ஆக்டிவேட் செய்து கொள்ளலாம்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

திருச்சியில் பரபரப்பு சம்பவம்; பி.எஸ்.என்.எல். ஊழியர் மர்ம மரணம்!

Published on 04/05/2024 | Edited on 04/05/2024
The BSNL employee in Trichy had gone in a fantastic manner

திருச்சி ரெயில்வே ஜங்ஷன் பகுதியில் ஒரு தனியார் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியில் மதுரை மாவட்டம் கோவலன் நகரை சேர்ந்த பாலாஜி (வயது 47) என்பவர் தங்கி இருந்தார். இவர் திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் கணக்காளராக பணியாற்றி வந்தார்.இவருக்கு திருமணம் ஆகி மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் மதுரையில் தங்கி உள்ளனர்.

இந்நிலையில் தங்கம் விடுதியில் இருந்த பாலாஜி நேற்று முன்தினம் இரவு அறையில் தூங்கியவர் காலையில் நீண்ட நேரம் ஆகியும் எழுந்திருக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர் அறைக்கு சென்று பார்த்தபோது அங்கு பாலாஜி படுத்த நிலையில் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த விடுதி மேலாளர் உடனடியாக கண்டோன்மென்ட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலாஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் முதல் கட்ட விசாரணையில் பால்ராஜ் அதிக கடன் வாங்கிய காரணத்தால் விரக்தியில் இருந்ததாகவும், கடந்த ஒரு மாதமாக சரியாக வேலைக்கு செல்லாமல் மன உளைச்சலில் காணப்பட்டார்.

மேலும் அவரது அறையில் அவர் படுத்திருந்த படுக்கைக்கு அருகில் மது பாட்டில் கிடந்தது. எனவே இரவு தூங்கும் போது பாலாஜி மது குடித்துவிட்டு தூங்கிய நிலையில் இறந்ததாக தெரிகிறது. இருந்தபோதிலும் பாலாஜியின் உடலை பிரேத பரிசோதனை செய்த பிறகு தான் பாலாஜி எப்படி இறந்தார் என்பது குறித்து தெளிவாக தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Next Story

ராகுலின் அலுவலகத்தில் பி.எஸ்.என்.எல் இணைப்பு துண்டிப்பு!

Published on 08/04/2023 | Edited on 08/04/2023

 

disconnection of BSNL in Rahul gandhi office

 

எம்.பி பதவி நீக்கத்தைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் எம்.பி அலுவலகத்திற்கு வழங்கப்பட்டு வந்த இணைப்பை பி.எஸ்.என்.எல் நிறுவனம் துண்டித்துள்ளது.

 

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தொடர்ந்து அவர் எம்.பி பதவிலியிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டு மனு வரும் 13 ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. 

 

இதனிடையே ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அவருக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அரசு பங்களாவை ஏப்ரல் 22 ஆம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், தற்போது கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள ராகுல் காந்தியின் எம்.பி அலுவலகத்திற்கு வழங்கப்பட்ட இலவச டெலிஃபோன் மற்றும் இணையதள இணைப்புகளை பி.எஸ்.என்.எல் நிறுவனம் துண்டித்துள்ளது.