Skip to main content

திருமண மேடையில் மயங்கி விழுந்து உயிரிழந்த மணப்பெண்

Published on 17/01/2023 | Edited on 17/01/2023

 

 The bride fainted on the wedding stage and lost their live

 

திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது மணப்பெண் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்திலுள்ள பாதயிக்கர என்னும் பகுதியைச் சேர்ந்தவர் பாத்திமா பதூல். 19 வயதான பாத்திமா பதூலுக்கு அவரது பெற்றோர்கள் முஸ்தபா-சீனத் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்திருந்தனர்.  அதன்படி மூர்க்க நாடு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் பாத்திமா பதூலுக்கும் கடந்த சனிக்கிழமை திருமணம் நடைபெற இருந்தது. அதற்கு முந்தைய நாள் பாத்திமா வீட்டில் வைத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

 

நிகழ்ச்சியில் மணப்பெண் பாத்திமா போட்டோ ஷூட் எடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக உறவினர்கள், பெற்றோர்கள் பாத்திமாவை  பெரிந்தலமண்ணாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் இறுதியில் சிகிச்சை பலனின்றி மணப்பெண் பாத்திமா உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. அதனையடுத்து அவரின் உடல் மலப்புரம் மஞ்சேரி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. மணப்பெண்ணின் உயிரிழப்புக்கு நெஞ்சுவலியே காரணம் எனக் கூறப்பட்டாலும், முழுமையான பிரேதப் பரிசோதனை பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே இறப்பிற்கான காரணம் தெரியவரும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சபரிமலையில் தரிசன நேரம் நீட்டிப்பு

Published on 10/12/2023 | Edited on 10/12/2023
Extension of darshan time at Sabarimala

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மண்டல மகர விளக்கு பூஜைக்காக கோயில் நடை கடந்த நவம்பர் மாதம் 16 ஆம் தேதி மாலை 5 மணியளவில் திறக்கப்பட்டது. சபரிமலை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் கோயில் நடை திறக்கப்பட்டு நெய் தீபம் ஏற்றப்பட்டது. கோயில் நடை திறக்கப்பட்டு முக்கிய நிகழ்வாக கற்பூர ஆழியில் தீபம் ஏற்றப்பட்டது. இதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சுமார் 13 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் சபரிமலையில் தரிசன நேரம் நாளை (11.12.2023) முதல் 1 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது மாலை 4 மணிக்கு பதில் மதியம் 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11 மணி வரை பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்பட உள்ளனர்.

வழக்கமாக சபரிமலையில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு பின்னர் மதியம் 1 மணிக்கு நடை சாத்தப்படும். பிறகு மாலை 4 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு இரவு 11 மணி வரை பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒரு மணி நேரம் கூடுதலாக நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சபரிமலை நடை திறப்பு காரணமாகத் தமிழகத்திலிருந்து சபரிமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

Next Story

‘நா... படிக்கணும் என்ன விட்றுங்க...’- தாலி கட்டும் நேரத்தில் மணப்பெண் எடுத்த முடிவு 

Published on 09/12/2023 | Edited on 09/12/2023
  bride refused to marry while tying the thali

தாலி கட்டும் நேரத்தில் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த மணப்பெண்ணின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. 

கர்நாடக மாநிலம் சிக்கப்யலாடகெரே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கும் திப்பரெட்டிகலியே பகுதியைச் சேர்ந்த யமுனாவிற்கும் பெற்றோர்கள் திருமணம் செய்ய முடிவு செய்து, கடந்த மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த 7 ஆம் தேதி இருவருக்கும் சிக்கப்யலாடகெரேவில் திருமணம் நடைபெறுவதாக இருந்த நிலையில், மணமேடையில் மணமகன் தாலி கட்ட முயன்றபோது, திடீரென எனக்கு கல்யாணம் வேண்டாம் என்று மணமகள் கூறியுள்ளார். ஆனால் அவரது பெற்றோர் பெண்ணை சமாதானம் செய்து திருமணத்தை நடத்த முயன்றபோது, பெண் பிடிவாதமாக எனக்கு திருமணம் வேண்டாம் நான் படிக்கணும் என்று கூறி திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

மணப்பெண் திருமணத்திற்கு முதலில் சம்மதம் தெரிவித்துள்ளார். பின்பு அவருக்கு திருமணம் நடக்கவிருந்த ஒரு வாரத்திற்கு முன்பு அரசுக் கல்லூரியில் பட்ட மேற்படிப்பு படிக்க கல்லூரியில் சீட் கிடைத்ததால், தனது பெற்றோரிடம் தான் படிக்க வேண்டும் என்று கூறி திருமணத்தை நிறுத்துமாறு கூறியுள்ளார். ஆனால் அவர்கள் மணப்பெண்ணின் பேச்சை கேட்காமல் திருமணத்தை நடத்தவிருந்ததாகவும், அதனால்தான் தாலி கட்ட மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாகப் பரவி வருகிறது.