Skip to main content

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன்; 4 நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்பு

Published on 11/12/2022 | Edited on 11/12/2022

 

A boy who fell into a borehole; 4 days later recovery

 

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 8 வயது சிறுவன் 4 நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 

மத்தியப் பிரதேசத்தில் உள்ள பீடுல் மாவட்டத்தில் மாண்ட்வி என்னும் கிராமம் உள்ளது. இங்கு கடந்த வியாழன் அன்று மாலை 5 மணியளவில் 8 வயது சிறுவன் 400 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துள்ளார். 

 

சுமார் 55 அடி ஆழத்தில் சிக்கிக்கொண்ட சிறுவனை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதி கடினமான பாறைகளைக் கொண்ட பகுதி என்பதால் சிறுவனை மீட்க அமைக்கப்படும் சுரங்கப்பாதை தோண்டுவதில் தொய்வு ஏற்பட்டது. 

 

எனினும் தொடர்ந்து 4 நாட்களாக மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. மேலும் ஆக்ஸிஜன் தொடர்ச்சியாக ஆழ்துளைக் கிணற்றின் உள்ளே செலுத்தப்பட்டு வந்தது. 4 நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு இன்று (10/12/22) காலை 5.30 மணியளவில் சிறுவன் இன்று மீட்கப்பட்டான்.

 

உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். சிறுவனின் உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். உயிரிழந்த சிறுவனின் உடலுக்கு நிவாரணமாக 4 லட்சம் இழப்பீடு வழங்க மத்தியப் பிரதேச முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பாஜகவிற்கு கடைசிவரை டஃப் கொடுத்த 'நோட்டா'

Published on 05/06/2024 | Edited on 05/06/2024
 'Nota' gave tough to BJP till the end

18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின. தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தனிப் பெரும்பான்மை என்ற நிலையை இழந்து கூட்டணி ஆட்சியையே மத்தியில் பாஜக அமைக்க உள்ளது. மொத்தம் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 293 இடங்களில் பாஜக மட்டும் தனித்து 239 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. ஆட்சி அமைக்கத் தேவையான 272 தொகுதிகளை எந்த கட்சியும் தனித்துப் பெறாததால் கூட்டணி ஆட்சி அமையும் சூழ்நிலை நிலவுகிறது.

 'Nota' gave tough to BJP till the end

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மத்தியப்பிரதேசத்தின் ஒரு பகுதியாக உள்ள இந்தூர் தொகுதியில் பாஜக வேட்பாளருக்கு கடும் சவாலை கொடுத்துள்ளது 'நோட்டா'. நான்காம் கட்ட தேர்தல் கடந்த மே 13ம் தேதி இந்தூர் தொகுதியில் நடைபெற்றது. காங்கிரஸ் சார்பில் அக்ஷை கண்டி என்பவர் மனுதாக்கல் செய்திருந்தார். ஆனால் இறுதி நேரத்தில் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையின் போது அவர் தன்னுடைய மனுவை திரும்பப் பெற்றதோடு பாஜகவிற்கு தாவி விட்டார்.

 'Nota' gave tough to BJP till the end

அதனைத் தொடர்ந்து காங்கிரசின் மாற்று வேட்பாளர்களின் மனுக்களும் நிராகரிக்கப்பட்டது. இதனால் இந்தூரில் காங்கிரஸ் போட்டியிடாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் அங்கு பாஜகவிற்கு எதிரான பலம் வாய்ந்த வேட்பாளர் எதிரணியில் இல்லாதது பாஜகவிற்குக் கூடுதல் பலத்தை கொடுத்திருந்தது. ஆனால் இந்தூர் தொகுதி மக்கள் நோட்டாவிற்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்தது காங்கிரஸ். இதன் பாதிப்பு வாக்கு எண்ணிக்கையில் அப்படியே பிரதிபலித்துள்ளது. பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சங்கர் லால் வானி முதலிடத்தில் இருந்தாலும் இரண்டாம் இடத்தைப் பிடித்தது 'நோட்டா' இரண்டு லட்சத்து 18 ஆயிரத்து 674 வாக்காளர்கள் நோட்டாவிற்கு வாக்களித்தனர். மொத்தமாக பார்த்தால் நோட்டாவிற்கு 14.03% வாக்குகள் கிடைத்தது. இதனை குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் தலைமை 'ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் பாஜகவிற்கு  இது ஒரு பாடம்' என பதில் கொடுத்துள்ளது.

Next Story

ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தைக்கு நேர்ந்த சோகம்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Tragedy of the child who fell into the borehole

மத்திய பிரதேசம் மாநிலம் ரேவா என்ற மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் திறந்தவெளி ஆழ்துளைக் கிணறு ஒன்று அமைக்கட்டுள்ளது. இதில் 6 வயது குழந்தை ஒன்று கடந்த 12 ஆம் தேதி (12.04.2024) தவறி விழுந்தது. இந்த குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. அப்போது ரேவா மாவட்ட ஆட்சியர் பிரதிபா பால் கூறுகையில், ‘ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். ஆழ்துளைக் கிணற்றின் ஆழம் 70 அடி ஆகும். 50 அடி ஆழம் தோண்டிய பின் கேமரா மூலம் கிடைத்த தகவலின் படி குழந்தை 45 முதல் 50 அடி ஆழத்தில் சிக்கியிருக்கலாம் என தெரிய வருகிறது. தேசிய பேரிடர் மீட்புப்படையினர் குழந்தையை மீட்க கிடைமட்டமாக சுரங்கம் தோண்டி வருகின்றனர்’ எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். சுமார் 70 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் 40 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சிறுவனை மீட்கும் பணியில் இரண்டு நாட்களாக தீயணைப்பு துறை, பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர். இருப்பினும் உயிரிழந்த நிலையில் சிறுவனின் உடல் சடலமாக நேற்று (14.04.2024) மீட்கப்பட்டது.

இது குறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விவேக் லால் சிங் கூறுகையில், “தேசிய பேரிடர் மீட்புப்படையினர், போலீஸ், உள்ளூர் மக்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் ஆகியோர் சிறுவனை மீட்க சுமார் 45 மணிநேரம் கடுமையாக உழைத்தோம். ஆனால் எங்களால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.