/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/bladeni.jpg)
கடந்த 9ஆம் தேதி பெங்களூருவில் இருந்து சான்பிரான்சிஸ்கோ செல்வதற்காக ஏர் இந்தியா எனும் விமானம் சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் பயணித்த பயணியான பத்திரிகையாளர் மதுரஸ் பால், விமானத்தில் தனக்கு வழங்கப்பட்ட உணவில் பிளேடு இருந்ததாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு தனது வேதனையைப்பதிவு செய்தார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘ஏர் இந்தியாவின் விமானத்தில் வழங்கப்பட்ட அத்திப்பழ சாட் உணவு ஒன்றில் பிளேடு கிடந்தது. நான் அதை இரண்டு அல்லது மூன்று வினாடிகள் மென்று சாப்பிட்ட பிறகு அது என் உணவில் இருப்பதை உணர்ந்தேன். நான் அதை துப்பியவுடன், அது பிளேடு என்பது தெரியவந்தது. இதற்கு பணிப்பெண் மன்னிப்பு கேட்டார். மேலும் அவர், ஒரு கிண்ணம் கொண்டைக்கடலை வழங்கினார். எந்தவொரு விமானத்திலும் பிளேடு இருப்பது ஆபத்தானது. இரண்டாவது, அது என் நாக்கை வெட்டக்கூடும். மூன்றாவதாக, ஒரு குழந்தை இந்த உணவை சாப்பிட்டால் என்ன செய்வது’ என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இவர் பதிவிட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. நடந்த சம்பவத்தை ஏர் இந்தியா நிறுவனம் ஒப்புக்கொண்டது. இது குறித்து தலைமை வாடிக்கையாளர் அனுபவ அதிகாரி ராஜேஷ் டோக்ரா கூறுகையில், “எங்கள் கேட்டரிங் பார்ட்னர் பயன்படுத்தும் காய்கறிகளை வெட்டுவதற்கு பயன்படுத்தும் இயந்திரத்தின் பாகம் என நாங்கள் ஆராய்ந்து கண்டறிந்துள்ளோம். கடினமான காய்கறிகளை நறுக்கிய பிறகு பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த நாங்கள் அவர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். இனி இதுபோன்று நடப்பதை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை எடுப்போம்” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)