Skip to main content

பசு, பகவத் கீதை, கங்கை மூன்றும் இந்தியர்களின் அடையாளம் - பா.ஜ.க. அமைச்சர் பேச்சு!

Published on 11/08/2020 | Edited on 11/08/2020
நவ

 

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. 
 


வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி, சீனா முதலிய நாடுகளில் கரோனாவின் தாக்கம் அதிகம் இருந்து வருகின்றது. பல லட்சக்கணக்கான மக்கள் இந்தத் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனைத் தடுப்பதற்காக 20க்கும் மேற்பட்ட நாடுகள் கரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவில் அதன் தாக்கம் உச்சகட்டத்தில் இருந்து வருகின்றது. வளர்ந்த நாடுகளிலும் அதன் தாக்கம் உச்சத்தில் இருந்து வருகின்றது. இந்தியாவில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பலகட்ட ஊரடங்கை மத்திய அரசு அறிவித்து செயல்படுத்தியது. இந்த இக்கட்டான நேரத்தில் உத்தரபிரதேச அமைச்சர் லட்சுமி நாரயன் சவுத்ரி சர்ச்சை கருத்தைத் தெரிவித்துள்ளார். அதில், பசு, பகவத் கீதை மற்றும் கங்கை ஆகியவைதான் இந்தியாவின் அடையாளம் என்றும், எனவே இம்மூன்றையும் நாம் வணங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

 
The website encountered an unexpected error. Please try again later.