Skip to main content

அணை உடைய நண்டு காரணம்...18பேர் பலி...அமைச்சரின் பதிலால் அதிர்ச்சி! 

Published on 05/07/2019 | Edited on 05/07/2019

சமீபத்தில் மகாராஷ்டிராவில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் 18பேர் பலியாகினர். இது குறித்து அம்மாநில அமைச்சர் அளித்த பதிலால் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மகாராஷ்டிராவில் உள்ள திவாரி என்ற அணை சிறிது நாட்களுக்கு முன்பு உடைந்து பெரும் வெள்ளப்பெருக்கு  ஏற்படுத்தியது. அப்போது வெள்ளத்தில் சிக்கி 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
 

bjp



இந்த துயர சம்பவத்துக்கு பிறகு அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் தானாஜி சாவந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அணை உடைந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர், அணையில் அதிகமாக நண்டுகள் இருந்ததே இந்த உடைப்புக்கு காரணம் என்றும், அணை உடைப்புக்கு முந்தைய நாளில் மட்டும், கனமழையால் அணையின் நீர் மட்டம் 8 மீட்டருக்கு உயர்ந்ததாகவும் தெரிவித்தார். இவரின் இந்த விளக்கத்தை விமர்சித்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக், அணையை கட்டிய கான்ட்ராக்டரை காப்பாற்றுவதற்காக அமைச்சர் அப்பாவி நண்டுகள் மீது பழிபோடுவதாக தெரிவித்தார். அமைச்சரின் இந்த பதிலால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சார்ந்த செய்திகள்