/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rahaiswarya-ni.jpg)
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி, 'இந்திய ஒற்றுமைப் பயணம்' என்ற நடைப்பயணத்தை கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி ஸ்ரீநகர் வரை 3,750 கிலோமீட்டர் கடந்து முடித்தார். இதனைத் தொடர்ந்து, இந்திய ஒற்றுமைப் பயணத்தில் இரண்டாம் கட்ட பயணத்திற்கு ‘பாரத் நீதி யாத்திரை’ எனப் பெயரிடப்பட்டு, கடந்த 14ம் தேதி மணிப்பூரில் இருந்து துவங்கினார். இந்த நடைப்பயணம் மார்ச் 20 வரை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. மணிப்பூரில் துவங்கிய இந்தப் பயணம் மும்பையில் முடிகிறது.

பல்வேறு மாநிலங்கள் வழியாக மேற்கு வங்கம் வந்த ராகுல் காந்தியின் யாத்திரை ஜார்க்கண்ட் மாநிலத்தை கடந்து தற்போது உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நுழைந்துள்ளது. இந்த பயணத்தின் போது, ராகுல் காந்தி வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “வாரணாசிக்கு சென்றபோது இரவில் மாணவர்கள் போதையில் சாலையில் கிடந்ததைப் பார்த்தேன். இவர்களின்எதிர்காலம் என்னவாகும்?.
ராமர் கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவைப் பார்த்தீர்களா?. அங்கு ஒரே ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் முகம் தான் இருந்ததா?. அங்கு அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், மற்றும் நரேந்திர மோடி தான் இருந்தனர். அனைத்து ஊடகங்களும், அம்பானி, அதானிக்கு சொந்தமானது. ஊடகங்களில் எதையாவது காட்ட வேண்டும் என்றால் ஐஸ்வர்யா ராயின் நடனத்தை காட்டுகிறார்கள். அமிதாப்பச்சனை காட்டுகிறார்கள். ஆனால், ஏழைகள், தொழிலாளிகள், விவசாயிகளின் பிரச்சனைகளை காட்டப் போவதில்லை” என்று பேசினார். உத்தரப்பிரதேச மாணவர்கள் பற்றியும், ஐஸ்வர்யாராய் பற்றியும் ராகுல் காந்தியின் பேச்சு தற்போது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. இதற்கு பா.ஜ.க.வினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)