தலைநகர் தில்லியில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தில்லி போலிசார் காட்டுமிராண்டி தனமாக தாக்குதல் நடத்தினார்கள். அவர்களை கண்டித்து கல்லூரி மாணவர்கள் தில்லியில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். தில்லியில் கடும் பனிப்பொழிவு நிலவினாலும் அது எதையும் பொருட்படுத்தாமல் மாணவர்கள் இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள்.

kl

Advertisment

இந்த இக்கட்டான நிலையில், டெல்லியில் வாழும் சீக்கியர்கள் சிலர், போராட்டம் செய்யும் மாணவர்களுக்கு பிரியாணி ,டீ, காபி ஆகியவற்றை இலவசமாக கொடுத்து அவர்களின்பசியினை போக்குகிறார்கள். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த உணவு கொடுப்பவரையும் இணையவாசிகள் பாராட்ட தவறவில்லை.