Skip to main content

பூஸ்டர் டோஸாகும் புதிய கரோனா தடுப்பூசி? - மூன்றாவது கட்ட சோதனைக்கு அனுமதி!

Published on 29/12/2021 | Edited on 29/12/2021

 

covid vaccine

 

இந்தியாவில் கரோனா பரவல் சில மாநிலங்களில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதேபோல் ஒமிக்ரான் பாதிப்பு நாட்டில் அதிகரித்து வருவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கரோனா மற்றும்  ஒமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி,  இந்தியாவில் 15 முதல் 18 வயதுள்ளவர்களுக்கு ஜனவரி 3ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் எனவும், ஜனவரி 10 முதல் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் அறிவித்தார்.

 

அதனைத்தொடர்ந்து நேற்று, பயோலொஜிக்கல் இ நிறுவனத்தின் கோர்பேவாக்ஸ் தடுப்பூசிக்கும், சீரம் நிறுவனம் தயாரித்துள்ள கோவோவாக்ஸ் தடுப்பூசிக்கும் இந்தியாவில் அவசர கால அங்கீகாரம் வழங்கப்பட்டது. இந்தசூழலில் பயோலொஜிக்கல் இ நிறுவனத்தின் கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை பூஸ்டர் டோஸாக பயன்படுத்துவது தொடர்பான மூன்றாவது கட்ட பரிசோதனைக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதியளித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் செலுத்திக்கொண்டவர்களுக்கு அத்தடுப்பூசிகளே பூஸ்டர் டோஸ்களாக செலுத்தப்படவுள்ள நிலையில், பயோலொஜிக்கல் இ நிறுவன பரிசோதனை வெற்றிபெற்றால், கோர்பேவாக்ஸ் தடுப்பூசி பூஸ்டராக செலுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கார்பேவாக்ஸ் பூஸ்டர் டோஸாக செலுத்திக் கொள்ள அனுமதி! 

Published on 10/08/2022 | Edited on 10/08/2022

 

Carbevax Booster Dose Allowed!

 

கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசியைச் செலுத்திக் கொண்ட 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், பூஸ்டர் டோஸாக கார்பேவாக்ஸ் மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது. 

 

கோவாக்சின் (அல்லது) கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்தி ஆறு மாதமோ (அல்லது) 25 வாரங்களோ நிறைவடைந்திருந்தால், கார்பேவாக்ஸைப் பூஸ்டர் டோஸாக செலுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய் தடுப்புக்காக 18 வயது மற்றும் அதற்கும் மேற்பட்டவர்கள் கார்பேவாக்ஸ் டோஸை செலுத்திக் கொள்ள கடந்த ஜூன் மாதம் மத்திய மருந்து பொதுக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Next Story

சிறார்களுக்கு செலுத்த மேலும் ஒரு தடுப்பூசிக்கு அனுமதி!

Published on 21/02/2022 | Edited on 21/02/2022

 

corbevax

 

இந்தியாவில் கரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதேபோல் 15-18 வயதுடைய சிறார்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது.

 

இந்தச்சூழலில், பயோலாஜிக்கல் இ நிறுவனத்தின் கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையோருக்குச் செலுத்த அனுமதி வழங்குமாறு இந்தியத் தலைமை மருந்து கட்டுப்பாட்டாளருக்கு, அவரது நிபுணர் குழு பரிந்துரை செய்தது.

 

இந்தநிலையில் இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்டு, கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையோருக்குச் செலுத்த இந்தியத் தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதி வழங்கியுள்ளார். கோர்பேவாக்ஸ் தடுப்பூசிக்குக் கடந்த ஆண்டு டிசம்பரில் அவசர கால அங்கீகாரம் வழங்கப்பட்டதும், ஏற்கனவே இத்தடுப்பூசியை பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாகப் பயன்படுத்துவது குறித்த சோதனைக்கு இந்தியத் தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதி வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

இந்தியாவில் 15-18 வயதுடையோருக்கு கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது அவ்வயதினருக்கும் கோர்பேவாக்ஸ் தடுப்பூசி செலுத்தப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 12 வயதுடையோருக்கும் தடுப்பூசி திட்டம் விரிவுபடுத்தப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.