Skip to main content

பொதுப் போக்குவரத்துக்கு இன்று முதல் அனுமதி... கரோனாவுக்கு மத்தியில் அதிரடி அறிவிப்பு வெளியிட்ட பீகார் அரசு...

Published on 25/08/2020 | Edited on 25/08/2020

 

bihar resumes bus service

 

இன்று முதல் தங்களது மாநிலத்தில் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது பீகார் அரசு. 

 

கரோனா வைரஸ் பரவல் காரணமாகக் கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன்காரணமாக அரசுத்துறை, தனியார்த்துறை என அனைத்துத் துறைகளிலும் பணிகள் முடங்கியுள்ளன. அதேபோல பொதுமக்களின் பயணங்களைக் குறைக்கும் வகையில், பொதுப் போக்குவரத்தும் நாடு முழுவதும் நிறுத்தப்பட்டிருந்தது. நாடு முழுவதும் ரயில், விமானம் மற்றும் பேருந்து செவைகள் முடக்கப்பட்டிருந்தன. இந்தச் சூழலில், தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதால், பல மாநிலங்களில் மெல்ல மக்கள் நடமாட்டம் அதிகரிக்கத் துவங்கியுள்ளது.

 

கரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வந்தாலும், மக்கள் பல இடங்களில் சுற்றித்திரிவதும் வாடிக்கையாகி வருகிறது. இந்த நிலையில், பீகார் மாநிலத்தில், அரசு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம் என்று அம்மாநில அரசு அண்மையில் அறிவித்தது. இதனையடுத்து, இன்று முதல் பொதுப் போக்குவரத்து இயங்குவதற்கும் அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. இன்று முதல் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து சேவை மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்