poverty

கல்வி, சுகாதாரம், வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து பல பரிமாணங்களில் ஏழையாக உள்ள மாநிலங்களின் பட்டியலை மத்திய நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது. இந்த ஏழ்மையான மாநிலங்களின் பட்டியலில் பீகார் முதலிடத்தில் உள்ளது. அம்மாநிலத்தின் 51.91 சதவீத மக்கள் பல்வேறு பரிமாணங்களிலும்ஏழையாக உள்ளனர்.

Advertisment

பீகாருக்கு அடுத்த இடத்தில்ஜார்கண்ட் உள்ளது. அம்மாநிலத்தில்42.16 சதவீதமக்கள் ஏழையாக உள்ளனர். இந்தப் பட்டியலின் மூன்றாவது இடத்தில் உத்தரப்பிரதேசம் உள்ளது. அம்மாநிலத்தில் 37.79 சதவீதமக்கள் பல பரிமாணங்களிலும்ஏழைகளாக உள்ளனர்.

Advertisment

அதேபோல், பீகாரில்தான்அதிக அளவிலானமக்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது. பீகாரை அடுத்து மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிக அளவிலான மக்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது.

அதேநேரத்தில், கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ஏழ்மை குறைவாக இருப்பதாக நிதி ஆயோக்கின் அறிக்கை கூறுகிறது. அந்தப் பட்டியலின்படி கேரளாவில் 0.71 சதவீத மக்கள் மட்டுமே ஏழையாக உள்ளனர். கோவாவில்3.76 சதவீத மக்களும், சிக்கிமில் 3.82 சதவீத மக்களும், தமிழ்நாட்டில் 4.89 சதவீத மக்களும், பஞ்சாபில் 5.59 சதவீத மக்களும் ஏழ்மையில் இருக்கின்றனர்.