covaxin

இந்தியாவில் செலுத்தப்பட்டுவரும் கோவாக்சின் தடுப்பூசிக்கு இன்னும் உலக சுகாதார நிறுவனம், அவசரகால அங்கீகாரம்அளிக்கவில்லை. அதேநேரத்தில்பல உலக நாடுகள், தங்கள் நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட அல்லது உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்த தடுப்பூசிகளை செலுத்திக்கொண்ட வெளிநாட்டவர்களை மட்டுமே தங்கள் நாட்டிற்குள்அனுமதிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisment

இதனால் கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் வெளிநாடு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்தநிலையில், பாரத் பயோடெக் நிறுவனத்துக்கும், உலக சுகாதார நிறுவனத்துக்கும்இடையே ஒப்புதலுக்கு முந்தைய சமர்ப்பிப்பு கூட்டம் ஜூன் 23ஆம் தேதி நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

உலக சுகாதார நிறுவனத்திடம், அவசரகால அங்கீகாரத்திற்குத் தேவையான 90 சதவீத ஆவணங்களைச் சமர்பித்துவிட்டதாகபாரத் பயோடெக் நிறுவனம் முன்பே கூறியிருந்தது. இதன்தொடர்ச்சியாக மீதமுள்ள 10 சதவீத ஆவணங்களை 23ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் பாரத் பயோடெக் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு விரைவில் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதாரநிறுவனம் அவசரகால அங்கீகாரம் வழங்கும் எனவும் கருதப்படுகிறது.