
பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த சக மாணவியின் குளியல் வீடியோவை சக மாணவி ஒருவர் சமூக வலைதளங்களில் லீக் செய்தது தொடர்பான சம்பவம் சண்டிகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்கலைக்கழக விடுதி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட மாணவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் பல்கலைக்கழகத்தில் தங்கி உள்ள ஏராளமான மாணவிகளின் குளியல் வீடியோக்கள் லீக் ஆனதால் சில மாணவிகள் தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல்களை மறுத்துள்ள போலீசார், ஒரே ஒரு மாணவி மட்டும் தற்கொலை முயற்சி மேற்கொண்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. வீடியோவை லீக் செய்த மாணவியிடம் இருந்து மின்னணு சாதனங்கள், செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் குவிந்து போராட்டத்தில் ஈடுபடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)