'Ban RSS too'-Kerala MP comments!

பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா, ரெகாப் இந்தியா பவுண்டேஷன், ரெகாப் பவுண்டேஷன், கேம்பஸ் ஃபிரண்ட் ஆப் இந்தியா, அனைத்திந்திய இமாம் கவுன்சில், தேசிய மனித உரிமைகள் கூட்டமைப்பு, தேசிய மகளிர் ஃபிரண்ட், ஜூனியர் ஃபிரண்ட் ஆகிய இயக்கங்களுக்கு மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. அதேபோல் எம்பவர் இந்தியா பவுண்டேஷன் அமைப்புக்கும் 5 ஆண்டுகள் தடைவிதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

இந்த தடை குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கேரளா எம்.பி ஒருவர் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியாவை தடை செய்ததுபோல் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தையும் தடை செய்ய வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார். கேரள எம்பி கொடிக்குனில் சுரேஷ், ''பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியாவை மட்டும் தடை செய்தால் போதாது ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தையும் தடை செய்ய வேண்டும். நாடு முழுவதும் இந்து மதவாதத்தை பரப்பி வருகிறதுஆர்.எஸ்.எஸ். இதில்ஆர்.எஸ்.எஸ் இயக்கமும், பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியாவும் ஒன்றுதான்'' என தெரிவித்துள்ளார்.