கர்நாடகா மாநிலம், ஹம்பி பகுதியில் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரபல சிவன் கோயில் ஒன்று உள்ளது. இந்த கோயிலில், தினமும் ஏராளாமான பக்தர்கள் வழிபட்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த கோயில் வளாகத்தில் வாழைப்பழங்கள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயில் யானை மற்றும் பக்தர்களின் நலன் கருதி, இந்த தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கோயில் அறநிலையத்துறை அதிகாரி ஹனும்ந்தப்பா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது, “பக்தர்கள் யானைக்கு உணவளிக்கும் முயற்சியில் அதீத ஆர்வம் காட்டுவதை நாங்கள் காண்கிறோம். இது, சம்பந்தப்பட்ட யானைக்கு தீங்கு விளைவிப்பதோடு மட்டுமல்லாமல், அந்த இடத்தை மிகவும் அழுக்காகவும் செய்கிறது. வாழைப்பழத்தோல் மற்றும் வாழைப்பழங்களை கொண்டு வரும் பிளாஸ்டிக் பைகளை கூட பக்தர்கள் விட்டுச் செல்கின்றனர். இது உள்ளூர் விஷயம். எங்கள் கோவில் வளாகத்திற்குள் என்ன நடக்கிறது என்பதை அடிப்படையாக வைத்து நாங்கள் முடிவு செய்தோம்” என்று கூறியுள்ளார்.