Skip to main content

ஆட்டோ ஓட்டுநர் அவதாரம்... வைரலாகும் ரோஜா!

Published on 16/07/2022 | Edited on 16/07/2022

 

Auto driver avatar... viral roja!

 

ஆந்திர மாநிலம், நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், சுற்றுலாத்துறை அமைச்சரும், நடிகையுமான  ரோஜா, தனது தொகுதிக்கு நேரில் சென்று பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறியும் பொழுது அந்த பகுதி மக்களுடன் சேர்ந்து வித்தியாசமான முறையில் எதையாவது செய்து வைரலாவது வழக்கம். அண்மையில் இளைஞர்களுடன் ரோஜா கபடி விளையாடும் காட்சிகள் வெளியாகி இருந்தது.

 

இந்நிலையில் ஆந்திர மாநில ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அரசு நிதியுதவி வழங்கும் விழா நடைபெற்றது. 'வாகனமித்ரா' என்ற திட்டத்தின் கீழ் மூன்றாவது கட்ட நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி திருப்பதியில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட ஆந்திர சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா ஆட்டோ ஓட்டுநர்கள் போல் காக்கி உடை அணிந்து கொண்டு ஆட்டோ ஓட்டி மகிழ்ந்தார். தற்பொழுது இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தனியாக இருந்த மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்; கேபிள் ஆபரேட்டருக்கு போலீஸ் வலை

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
The old woman who was alone at home was brutalized; Police net for cable operator

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியின் கழுத்தை துண்டால் நெரித்து நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தில் கேபிள் ஆபரேட்டரை போலீசார் தேடி வருகின்றனர். ஆந்திராவில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆந்திர மாநிலம் கௌரவ பள்ளம் பூங்கா அருகே வசித்து வருபவர் மூதாட்டி லட்சுமி. இவர் மட்டும் தனியாக வீட்டில் வசித்து வந்த நிலையில், கேபிள் டிவி ஆபரேட்டர் கோவிந்த் நல்ல முறையில் பழகி வந்துள்ளார். வீட்டில் மூதாட்டி லட்சுமி மட்டும் தனியாக இருப்பதை அறிந்த கோவிந்த் அடிக்கடி வீட்டுக்கு வந்து உதவிகளை செய்வது போல் நடித்து வந்துள்ளார்.

இந்நிலையில் திடீரென வீட்டுக்கு வந்த கேபிள் ஆபரேட்டர் கோவிந்த், சோபாவில் மூதாட்டி அமர்ந்திருந்தபோது பின்புறமாகச் சென்று கையில் இருந்த துண்டால் கழுத்தை நெருக்கியுள்ளார். மூதாட்டி கத்திக் கூச்சலிட முயன்றும் விடாமல் நெருக்கமாகக் கழுத்தை நெருக்கியுள்ளார். இதில் மூதாட்டி மயக்கம் அடைந்தார். ஆனால் மூதாட்டி இறந்து விட்டதாக நினைத்த கோவிந்த், அவரிடம் இருந்த பத்து சவரன் நகையைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.

மயக்கம் தெளிந்த மூதாட்டி இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் கேபிள் ஆபரேட்டர் மூதாட்டியின் கழுத்தை நெரிக்கும் அந்த பரபரப்பு காட்சிகள் இடம் பெற்ற நிலையில், அதை ஆதாரமாக வைத்து கேபிள் ஆபரேட்டர் கோவிந்தை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

அமைச்சர் ரோஜா மீது பண மோசடி புகார்

Published on 25/01/2024 | Edited on 25/01/2024
minister roja counciler money laundering issue

ஆந்திர மாநிலம், நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் சுற்றுலாத்துறை அமைச்சராகவும் இருக்கிறார் நடிகை ரோஜா. இந்த நிலையில் திருப்பதி மாவட்டம் புத்தூர் நகராட்சியின் கவுன்சிலர் புவனேஷ்வரி என்பவர், ரோஜா மீது பண மோசடி புகார் கொடுத்துள்ளார். 

புவனேஷ்வரிக்கு நகர் மன்றத் தலைவர் பதவி வாங்கி தருவதாக ரோஜா கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில், ரோஜாவின் உறவினர் குமாரசாமியிடம் ரூ.40 லட்சம் தந்துள்ளதாக புவனேஷ்வரி தெரிவித்துள்ளார். மேலும் முதல் தவணையாக ரூ.20 லட்சம் கொடுத்ததற்கான வீடியோ ஆதாரத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். 

மேலும், இது தொடர்பாக பேசிய அவர், “இரண்டு ஆண்டுகள் கடந்தும், பதவி வழங்கவில்லை. இது தொடர்பாக அமைச்சர் ரோஜாவை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலையிட்டு சரி செய்ய வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளார்.