Published on 07/09/2018 | Edited on 07/09/2018

அதிகாரிகள் தங்களது அன்றாட உரையாடல் மூலம் இந்தியை பரப்பவேண்டும் என பிரதமர் மோடி அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய இந்தி குழுவின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்தி மொழியின் பண்புகளை பற்றி பேசிய மோடி அதிகாரிகள் தங்கள் அன்றாட உரையாடல்களில் இந்தி பேசுவதன் மூலம் இந்தியை பரப்ப வேண்டும் என அறிவுரை வழங்கினார். மேலும் அரசில் இந்தி மொழிக்கும் சமூகத்தில் இந்தி மொழிக்கும் உள்ள இடைவெளியை குறைக்க வேண்டும் அதற்கு கல்வி நிறுவனங்களும் முன்வர வேண்டும் என கூறினார். மேலும் இந்தி உட்பட அனைத்து இந்திய மொழிகளின் ஊடே உலகை தொடர்புகொள்ள முடியும் என்றார்.
இந்த கூட்டத்தில் குஜராத், இமாசலபிரதேசம், அருணாசலபிரதேசம் மாநில முதல்வர்கள் மற்றும் மத்திய இந்தி குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.