Skip to main content

புதுச்சேரி போலீசார் பெயரில் போலி முகநூல் -பணம் பறிக்க முயற்சி!

Published on 17/10/2020 | Edited on 17/10/2020
police

 

 

புதுச்சேரி கோரிமேடு காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிபவர் இனியன். உதவி ஆய்வாளராக இருந்த இவர் சமீபத்தில் ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றார். இந்நிலையில் இவரது பெயரில் மர்ம நபர் ஒருவர் போலியாக முகநூல் கணக்கு தொடங்கியுள்ளார். இந்த கணக்கில் இருந்து ஆய்வாளரின் நண்பர்களையும் இணைத்துள்ளார். தொடர்ந்து அவர்களுக்கு மெஸ்சஞ்சர் மூலம் நலம் விசாரித்த நிலையில், அவர்களும்  பதில் அளித்து வந்துள்ளனர். இதையடுத்து அந்த நபர், ஆய்வாளரின் நண்பர்களிடம் போன் நம்பரை பெற்று, தனது போன் நம்பரை மாற்றிவிட்டதாக கூறியுள்ளார். இப்படியே பேசிய அந்த நபர் அவர்களிடம், மெல்ல தனக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது என தெரிவித்து மெஸ்சஞ்சர் மூலம் பணம் கேட்டுள்ளார்.

 

இதில் சிலர் இனியனின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்களுக்கு ஏதும் பிரச்சனையா? திடீரென பணம் கேட்கிறீர்களே? என விசாரித்துள்ளனர். இதை கேட்டு, அதிர்ச்சி அடைந்த ஆய்வாளர் இனியனுக்கு பின்னர் தனது பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கப்பட்டு பணம் கேட்டிருப்பது தெரியவந்துள்ளது.

 

இதையடுத்து அவர் புதுச்சேரி சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆய்வாளர் இனியன் பெயரில் முகநூல் கணக்கு தொடங்கியது யார்? எதற்காக தொடங்கப்பட்டது? பணம் பறிக்க மட்டுமா? அல்லது வேறு காரணத்துக்காகவா என பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி வெட்டி கொலை; போலீசார் விசாரணை

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
drug dealer hacked to in broad daylight; Police investigation

புதுச்சேரி கோவில் திருவிழாவில் கஞ்சா வியாபாரி ஒருவரை ஐந்து நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி மாநிலம் பெரிய நகர் பகுதியைச் சேர்ந்தவர் ருத்ரேஷ். அந்தப் பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்த இவர் மீது கொலை முயற்சி வழக்கு, கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பெரியார் நகர் கங்கையம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் இன்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது. அதில் ருத்ரேஷின் தாய் மற்றும் தங்கை ஆகியோர் பால்குடம் எடுத்தனர். அதற்காக அங்கு ருத்ரேஷ் வந்திருந்த போது, கோவிலில் பதுங்கி இருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ருத்ரேஷை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொடூரமாக படுகொலை செய்தனர்.

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி பால் குட ஊர்வலத்திலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உருளையன்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடல் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.