Skip to main content

பதவியை ராஜினாமா செய்த தேர்தல் ஆணையர்...

Published on 18/08/2020 | Edited on 18/08/2020

 

ashok lavasa resigned from election commissioner

 

தேர்தல் ஆணையர் அசோக் லவாசா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

 

ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான அசோக் லவாசா கடந்த 2018 ஜனவரி 23-ஆம் தேதி தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்றார். இவரது பதவிக் காலம் 2022 அக்டோபரில் முடிவடைய உள்ள நிலையில், தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பிலிப்பின்ஸை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஆசிய மேம்பாட்டு வங்கியின் (ஏ.டி.பி.) துணைத் தலைவராக அசோக் லவாசா அண்மையில் தேர்வு செய்யப்பட்டதன் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ராஜினாமா கடிதத்தில், ஆகஸ்ட் 31-ஆம் தேதியோடு தனது பணியிலிருந்து ஓய்வுபெற விரும்புவதாகக் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, ஏ.டி.பி. வங்கியின் துணைத் தலைவராக லவாசா செப்டம்பர் மாதம் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்