Skip to main content

கரையைக் கடந்தது பிபர்ஜாய் புயல்; மீட்புப் பணிகள் தீவிரம்

Published on 16/06/2023 | Edited on 16/06/2023

 

arabian sea biporjoy cyclone in gujarat kutch district 

 

அரபிக் கடலில் உருவான பிபர்ஜாய் புயல் கடந்த வாரம் அதிதீவிரப் புயலாக வலுவடைந்தது. இதன் காரணமாக கட்ச்  மாவட்ட கடற்கரை பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பள்ளிகளுக்கு விடுமுறைகள் விடப்பட்டன.  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தேசியப் பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் இருந்தனர். வானிலை ஆய்வு மையம், பிபர்ஜாய் புயல் 15 ஆம் தேதி கரையைக் கடக்கும் என்று தெரிவித்திருந்தது. இதனால்  நேற்று காலை முதல் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. சுமார் 75 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

அதனைத் தொடர்ந்து அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த புயல் நேற்று மாலை 4.30 மணியளவில் குஜராத்தின் கட்ச் மாவட்டம் அருகே கடக்கத் தொடங்கியது. அப்போது பலத்த மழையும் பெய்து வந்தது. இதையடுத்து மாலை 6.30 மணியளவில் கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடக்கும் போது சுமார் 140 கி.மீ வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று வீசியது. குஜராத்தில் கரையைக் கடந்த பிபர்ஜாய் புயலால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர். பலத்த காற்று வீசியதால் மரங்கள் சாலைகளில் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதனால் மின்சார சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. குஜராத்தின் கட்ச் மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. சாலைகளில் வேரோடு சாய்ந்த மரங்களை தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புப் படையினர் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

 

புயல் கரையைக் கடந்தது குறித்து குஜராத் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ருஷிகேஷ் படேல் செய்தியாளரிடம் பேசுகையில், "கட்ச் மாவட்டத்தில் இதுவரை பொதுமக்கள் உயிரிழந்ததாகத் தகவல்கள் இல்லை. தற்போது முந்த்ரா, ஜக்குவா, கோட்டேஷ்வர், லக்பத் மற்றும் நலியா ஆகிய இடங்களில் மழை பெய்து வருகிறது. பிபர்ஜாய் புயல் காரணமாக தெற்கு ராஜஸ்தானின் சில பகுதிகளிலும் மழை எதிர்பார்க்கப்படுகிறது. கடலோர மாவட்டங்களின் பல பகுதிகளில் சாலையைச் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது" எனத் தெரிவித்தார். 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

கணநேரத்தில் 40 அடி பள்ளத்தில் சிக்கிய தொழிலாளர்கள்; வேளச்சேரியில் சோகம்

Published on 04/12/2023 | Edited on 04/12/2023

 

 The workers were momentarily trapped in a 40-foot ditch; Tragedy in Velachery

 

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவிலிருந்து பலத்த சூறைக் காற்றுடன் கனமழை பொழிந்து வருகிறது. மிக்ஜாம் புயல் காரணமாக 23 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் சென்னை வேளச்சேரியில் ஐந்து பரலாங் சாலையில் 40 அடி பள்ளத்தில் ஐந்து தொழிலாளர்கள் சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசோக் லைலேண்ட் நிறுவனத்தால் கட்டிடம் கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் பள்ளத்தில் தொழிலாளர்கள் உள்ளே விழுந்தனர். தற்போது வரை மூன்று பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இரண்டு பேரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திடீர் பள்ளத்தில் சுற்றியுள்ள மழை நீர் இறங்கி வருகிறது. கணநேரத்தில் நிகழ்ந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

மிரட்டும் மிக்ஜாம்; முடங்கிய சென்னை 

Published on 04/12/2023 | Edited on 04/12/2023

 

threatenedmichaung; Paralyzed Chennai

 

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவிலிருந்து பலத்த சூறைக் காற்றுடன் கனமழை பொழிந்து வருகிறது. மிக்ஜாம் புயல் காரணமாக 23 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னையின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய பெய்த பலத்த மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது. அவசியமின்றி மக்கள் வெளியே வர வேண்டாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

 

ஆவடி பகுதியில் அதிகப்படியான மழை நீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர். சென்னை பெருங்குடியில் அதிகபட்சமாக 29 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மீனம்பாக்கத்தில் 23 சென்டிமீட்டர் மழையும், அடையாறு 23.5 சென்டிமீட்டர் மழையும், கோடம்பாக்கத்தில் 21.8 சென்டிமீட்டர் மழையும், சோழிங்கநல்லூரில் 21.3 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. கனமழை காரணமாக கோவைக்கு இயக்கப்படும் அனைத்து விமானங்களும் மறு உத்தரவு வரும் வரை ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலைய பகுதியில் கனமழை நீடிப்பதால் சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

 

மழை வெள்ள பாதிப்பு அதிமாக உள்ள தாம்பரம், வேளச்சேரி பகுதிகளுக்கு  25 பேர் கொண்ட பேரிடர் மீட்புக்  குழு விரைந்துள்ளது. சென்னையில் நான்கு குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் அரக்கோணத்தில் இருந்து மேலும் இரண்டு குழுக்கள் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்