ஆந்திர மாநிலத்தின் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவையில் 25 பேர் கொண்ட பட்டியலையும், 5 துணை முதல்வர்கள் கொண்ட பெயர் பட்டியலை முதல்வர் ஜெகன் ஆந்திரா மற்றும் தெலுங்கானா கூட்டு ஆளுநர் நரசிம்மனை நேரில் சந்தித்து வழங்கினார். இதன் தொடர்ச்சியாக ஆந்திர மாநில தலைநகர் அமராவதியில் இன்று காலை 11.49 மணியளவில் அமைச்சரவை பதவியேற்பு விழா திட்டமிட்டப்படி நடைபெற்றது. இதில் நகரி சட்டமன்ற உறுப்பினரும், நடிகையுமான ரோஜாவும் ஜெகன் அமைச்சரவையில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரோஜா அமைச்சரவையில் இடம் பெறவில்லை. இதனால் ரோஜாவின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

JAGAN

Advertisment

Advertisment

ஜெகன் அமைச்சரவையில் குறைவான பெண் அமைச்சர்களே இடம் பெற்றுள்ளனர். ஆந்திர மாநில அமைச்சரவை கூட்டம் இன்று முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் மக்களுக்கான திட்டங்கள் குறித்தும், வேலை வாய்ப்பு குறித்தும் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆந்திர மாநில அமைச்சர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது தொடர்பாக உத்தரவுகளை ஜெகன்மோகன் வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே போல் பல அதிரடி திட்டங்களையும் அமைச்சரவை கூட்ட முடிவில் தெரிவிக்க இருக்கிறார்.