உலகளவில் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ், இந்தியாவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்த போதிலும் இந்த வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் 2500க்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஆந்திராவில் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக முதன்முறையாக ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்த 55 வயதுடைய அந்த நபர் கடந்த 30-ம் தேதி உயிரிழந்தார் என்பதும், அவரது இறப்புக்கான காரணம் உறுதி செய்யப்படாமல் இருந்த நிலையில், தற்போது அவர் கரோனா வைரஸால்தான்உயிரிழந்தார் என்பதுஉறுதி செய்யப்பட்டுள்ளது,என்பதும் குறிப்பிடத்தக்கது.