Andhra government following Tamil Nadu!

இறக்கும் முன் உடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச்சடங்குகள், இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் எனத்தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு அறிவித்திருந்தார்.

Advertisment

இது தொடர்பாக, அவர் கூறியதாவது, ‘உறுப்பு தானம் செய்து மற்றவர்களுக்கு வாழ்வளிக்கும் பணியில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக நாட்டில் தொடர்ந்து விளங்கி வருகிறது. தன்னுடைய உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில் இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும்" எனத் தெரிவித்திருந்தார். அதன்படி, தமிழ்நாட்டில் உள்ளவர்கள், அவர்கள் இறக்கும் முன் உறுப்பு தானம் செய்து இறந்த பின் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Advertisment

இந்த நிலையில், தமிழ்நாட்டைப் பின்பற்றி ஆந்திரா அரசும் உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதை தரப்படும் என்று அறிவித்துள்ளது. சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திரப் பிரதேச அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ஜீவந்தன்’ திட்டத்தின் கீழ் இறந்தவர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்ய சம்மதம் தெரிவிக்கும் இறந்த உறுப்பு தானம் செய்பவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆந்திரா அரசு மரியாதை செலுத்தப்படும். உடல் உறுப்பு தானம் செய்து இறந்தவர்களின் உடல் மீது மாலை அணிவித்து, அவரது குடும்ப உறுப்பினர்களுக்குச் சால்வை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். மேலும், இறந்த நன்கொடையாளரின் குடும்ப உறுப்பினர்களுக்கு இறுதிச் சடங்கு நடத்துவதற்காக மாநில அரசு ரூ.10,000 தொகை வழங்கப்படும்’ எனத் தெரிவித்துள்ளது.