Skip to main content

கரோனாவால் 6 மாதத்தில் ரூ.8,000 கோடி வருமானம் இழந்து தவிக்கும் இந்திய தீவு!

Published on 06/10/2020 | Edited on 06/10/2020

 

Andaman and Nicobar island to lose Rs 8,000 crore in revenue in 6 months by Corona!


இந்த ஆண்டு மார்ச் 24முதல் கரோனா காரணமாக இந்தியாவில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பெரும் வியாபரங்கள் முதல் சிறு குறு தொழில் வரை அனைத்தும் பெரிய பாதிப்புகளை சந்தித்தன. குறிப்பாக சுற்றுலாவை மட்டுமே பெரிய அளவில் நம்பியிருக்கும் சில மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் பெரும் பாதிப்பை சந்தித்தன. 
 


அந்த வகையில் சுற்றுலாத்துறை மூலமாகவே பெரும் வருமானம் ஈட்டும் அந்தமான் நிக்கோபார் யூனியன் பிரதேசத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் இந்த செப்டம்பர் மாதம் வரையில் சுமார் ரூ.8,000 கோடி வருமானம் இழந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் 35,000 குடும்பங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

 


இந்த தீவில் இதுவரை 3,868 நபர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதில் 173 பேர் சிகிச்சை பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.  

 

 

 

சார்ந்த செய்திகள்

 
The website encountered an unexpected error. Please try again later.