ஆகஸ்ட் 11ஆம் தேதி கொல்கத்தாவில் நடக்க இருக்கும் பேரணிக்கான அனுமதியை காவல்துறை வழங்கியது.
கடந்த புதன்கிழமை அன்று பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா , "கொல்கத்தாவில் இருக்கும் அரசாங்கம் என்னை கைது செய்தாலும் பரவாயில்லை, கொல்கத்தாவிற்கு வருவேன்" என்று உறுதியாக கூறியிருந்தார்.
ஆகஸ்ட் 11 ஆம் தேதி அன்று கொல்கத்தாவில் அமித்ஷா தலைமையில் மிகப்பெரிய பேரணி நடத்த உள்ளது கொல்கத்தா பாஜக இளைஞர் அணி. இது சம்மந்தமாக கொல்கத்தாவில் ஐந்து இடங்களின் பெயரை குறிப்பிட்டு காவல்துறையிடம் அனுமதி கேட்டிருந்தது. ஆனால், காவல்துறை அதற்கான அனுமதியை வழங்காமல்இருந்தது.
தற்போது இந்த பேரணிக்கான அனுமதியை வழங்கியுள்ளது கொல்கத்தா காவல்துறை. இப்பேரணி மாயோ சாலையில் நடக்க இருக்கிறது.