காஷ்மீர் மாநிலம் முழுவதும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு வந்தநிலையில், அமர்நாத் யாத்திரை, மாதா யாத்திரை என்றழைக்கப்படும் துர்க்கையம்மன் யாத்திரை ஆகியவை நிறுத்தப்பட்டன. அதுமட்டுமல்லாமல் அங்குள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும், விடுதியில் தங்கி பயிலும் மாணவர்கள் உடனடியாக விடுதியை விட்டு வெளியேறி சொந்த ஊருக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.

amit shah meets ajit doval

Advertisment

Advertisment

இந்நிலையில் பாகிஸ்தானிலிருந்து ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் மற்றும் பாகிஸ்தானியர்கள் இந்திய ராணுவத்தால் நேற்று கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலை, மத்திய அமைச்சர் அமித்ஷா சந்தித்து அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

மேலும் காஷ்மீரில் பதட்டமான சூழல் நிலவி வரும் இந்த நிலையில், அம்மாநிலத்திலும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு ஆவணம் செய்யும் புதிய மசோதா மக்களவையில் விரைவில் தாக்கல் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான முயற்சிகளில் அமித்ஷா இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.