உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒருவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றஆம்புலன்ஸ் பாதி வழியில் டீசல் தீர்ந்து நின்ற நிலையில் உறவினர்கள் ஆம்புலன்சைதள்ளிச் செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்ட ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல 108 ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டது. ஆம்புலன்ஸ் மூலம் நோயாளி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில்,பாதி வழியிலேயே டீசல் இன்றி ஆம்புலன்ஸ் நின்றது.
இதனால் நோயாளியின் உறவினர்கள் ஆம்புலன்சைதள்ளிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டது. இந்தக் காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியான நிலையில் வைரலாகி வருகிறது. அதே நேரம் இந்த சம்பவத்தில் மருத்துவமனைக்குச் செல்ல காலதாமதம் ஆனதால் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட நபர் ஆம்புலன்சிலேயே உயிரிழந்தார்.