amazon

பிரபல இணையவழி வணிக நிறுவனமான 'அமேசான்' சமையல் எரிவாயு துறையிலும் கால் பதித்துள்ளது.

Advertisment

பிரபல இணையவழி வணிக நிறுவனமான அமேசான், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி, இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத் தயாரிப்பு சமையல் எரிவாயு சிலிண்டர்களை (HP), இனி அமேசான் இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம். அமேசான் இணையதளம் அல்லது செயலி வழியாகச் சென்று 'அமேசான் பே' வசதியைப் பயன்படுத்தி இச்சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு முன்பு தொலைப்பேசி வாயிலாக அழைத்து ஐ.வி.ஆர் முறை மூலமாக முன்பதிவு செய்யும் வசதி மட்டுமே இருந்தது.

Advertisment

இது குறித்து, அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மகேந்திர நேருர்கர் கூறுகையில், "பலதரப்பட்ட விஷயங்களில் இணையதளப் பணப்பரிவர்த்தனையை ஏற்படுத்த, தொடர்ந்து உழைத்து வருகிறோம். இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தமானது சமையல் எரிவாயு முன்பதிவு செய்யும் வசதியையும், பணம் செலுத்தும் வசதியையும் எளிமைப்படுத்தி, பல லட்சக்கணக்கான நுகர்வோர்களுக்குப் பயனளிக்கும்" எனக் கூறினார்.