Skip to main content

சமாஜ்வாதி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சிங்கப்பூரில் காலமானார்...

Published on 01/08/2020 | Edited on 01/08/2020

 

amar singh passed away at singapore

 

சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் அமர்சிங் உடல்நலக்குறைவு காரணமாக சிங்கப்பூரில் காலமானார். 

 

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் 1956ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி பிறந்த அமர்சிங், காங்கிரஸ் கட்சியில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்து அக்கட்சித் தலைவர் முலாயம் சிங்குக்கு நெருக்கமானவராகத் திகழ்ந்தார். 1996 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அமர்சிங், சமாஜ்வாதி கட்சியின் முக்கிய தலைவராக பல்வேறு பணிகளை மேற்கொண்டிருந்தார். தற்போது உத்தரப்பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த அவர், நீண்ட காலமாகவே சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த சூழலில், உடல் நலக்கோளாறு காரணமாக சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைபெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காத காரணத்தால் அவர் இன்று உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர்; டிங் லிரென் - குகேஷ் மோதல்!

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
World Chess Championship Series Ding Liran - Gukesh

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் வரும் நவம்பர் 20 ஆம் தேதி முதல் டிசம்பர் 15 ஆம் தேதி வரை நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இந்த செஸ் சாம்பியன்ஷிப் தொடரை நடத்த விரும்புவோர் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என பிடே (FIDE - International Chess Federation) தெரிவித்திருந்தது. மேலும் செஸ் தொடரை நடத்த குறைந்தபட்ச ஏலத் தொகையாக சுமார் ரூ.68 கோடி நிர்ணயிக்கபட்டிருந்தது.

இந்நிலையில் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் சிங்கப்பூரில் நடைபெற உள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பிடே வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “நடப்பு உலக சாம்பியனான டிங் லிரென் - குகேஷ் விளையாட உள்ளனர். பரபரப்பான இந்த போட்டி  2.5 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத் தொகையைக் கொண்டது. அதன்படி இந்த போட்டி நவம்பர் 20ஆம் தேதி முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. டிங் லிரென் வெற்றி பெற்று தனது பட்டத்தை தக்கவைப்பாரா அல்லது குகேஷ் உலக சாம்பியனாவாரா?. 

World Chess Championship Series Ding Liran - Gukesh

சிங்கப்பூர் செஸ் கூட்டமைப்பு, உலக சாம்பியன்ஷிப் போட்டி 2024ஐ நடத்துவதற்கான வாய்ப்பை வென்றுள்ளது. உலக சாம்பியன்ஷிப் போட்டியை நடத்துவதற்கு மூன்று போட்டி விண்ணப்பங்கள் வந்தன. இந்திய அரசு சார்பில் டெல்லியில் நடத்தவும், தமிழக அரசு சார்பில் சென்னையிலும், மற்றும் சிங்கப்பூர். இந்த ஏலங்களை மதிப்பாய்வு செய்து, போட்டி நடத்துவதற்கான சாத்தியமான அனைத்து நகரங்களையும் அவற்றின் இடங்கள், வசதிகள், நிகழ்ச்சிகள் மற்றும் வாய்ப்புகளை ஆய்வு செய்த பிறகு போட்டியின் தொகுப்பாளராக சிங்கப்பூர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மக்களவையில் செங்கோலை நீக்கக் கோரி கடிதம்; தமிழில் பதிலளித்த யோகி ஆதித்யநாத்

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
Yogi Adityanath replied in Tamil for Letter demanding removal of sengol in Lok Sabha

18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 24 ஆம் தேதி (24.06.2024) காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்த கூட்டத் தொடரையொட்டி மக்களவைக்குப் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மக்களவை சபாநாயகர் தேர்தல் நேற்று (26.06.2024) நடைபெற்றது. இதில் பாஜகவின் ஓம் பிர்லா, காங்கிரசின் கொடிக்குன்னில் சுரேஷ் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார்.\

இந்நிலையில், இன்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு  நாடாளுமன்றத்திற்கு வந்து உரையாற்றினார். இதற்கிடையில், நாடாளுமன்ற மக்களவையில் உள்ள செங்கோலை நீக்க வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சி எம்.பி ஆர்.கே.சவுத்ரி மக்களவை சபாநாயகருக்கு நேற்று (26-06-24) கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், ‘அரசியலமைப்பு ஜனநாயகத்தின் சின்னம். கடந்த ஆட்சியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவியது. செங்கோல் என்பது ராஜாவின் கம்பு என்று பொருள். சமஸ்தானத்தை முடிவுக்கு கொண்டு வந்த பிறகு, நாடு சுதந்திரம் பெற்றது. நாடு ராஜாவால் நடத்தப்பட வேண்டுமா அல்லது அரசியலமைப்பால் நடத்தப்பட வேண்டுமா?. அரசியலமைப்பை காப்பாற்ற பாராளுமன்றத்தில் இருந்து செங்கோலை நீக்க வேண்டும் என்று கோருகிறேன்’ என்று தெரிவித்திருந்தார்.

அவரது கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சமாஜ்வாதி கட்சியினரும், இந்தியா கூட்டணி கட்சிகளும், மக்களவையில் வைக்கப்பட்டுள்ள செங்கோலை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். அதனை தொடர்ந்து, சமாஜ்வாதி கட்சி எம்.பி ஆர்.கே.சவுத்ரியின் அந்த கடிதத்திற்கு பா.ஜ.க.வினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில், உத்தரப் பிரதேச முதல்வரும், பா.ஜ.க மூத்த தலைவருமான யோகி ஆதித்ய்நாத் செங்கோல் விவகாரம் குறித்து பதிலளித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “இந்திய நாட்டின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை சமாஜ்வாதி கட்சி எப்போதுமே மதித்ததில்லை. ‘செங்கோல்’ பற்றிய அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் கண்டனத்துக்குரியது மட்டுமின்றி அவர்களின் அறியாமையையும் காட்டுகிறது. குறிப்பாக தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரான இந்தியா கூட்டணிக் கட்சிகளின் அறியாமையைக் காட்டுகிறது. ‘செங்கோல்’ இந்தியாவின் பெருமையான அடையாளங்களுள் ஒன்று. பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் செங்கோலுக்கு உயரிய மரியாதையை அளித்து இந்தியர்கள் அனைவருக்குமே பெருமை சேர்த்துள்ளார்” என்று தமிழில் பதிவிட்டுள்ளார்.