Skip to main content

திருப்பதியில் இன்று முதல் அனைத்து பக்தர்களும் தரிசனம் செய்ய அனுமதி!

Published on 11/06/2020 | Edited on 11/06/2020

tpty


உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 73 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 4 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. 
 


இதுவரை நான்கு கட்ட ஊரடங்கு முடிவடைந்து 5 ஆம் கட்ட ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகின்றது. இந்த ஊரடங்கில் கொடுக்கப்பட்ட தளர்வின் அடிப்படையில் இந்தியா முழுவதும் சில இடங்களைத் தவிர்த்து கோவில்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் திருப்பதி கோயிலில் சோதனை முயற்சியாக உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதிப்பது என்று ஆந்திர அரசு சில தினங்களுக்கு முன்பு முடிவெடுத்திருந்தது. அதன்படி கடந்த சில நாட்களாக உள்ளூர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், இன்றில் இருந்து அனைத்து பக்தர்களும் சாமியை தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. டிக்கெட்கள் ஆன் லைனிலும் விற்கப்பட இருப்பதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

அதிகாலையில் நிகழ்ந்த சாலை விபத்து; 4 பேர் உயிரிழப்பு

Published on 27/05/2024 | Edited on 27/05/2024
An early morning road accident; 4 people lost their lives

திருப்பதி அருகே இன்று அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் சிலர் காரில் ஒன்றாக சேர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்கு சென்றிருந்த நிலையில், பின்னர் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலுக்கு இன்று காலை காரில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர்.

கார் நாயுடுபேட்டை-சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த நிலையில் கொங்கரவாரிபள்ளி என்கிற இடத்தில் சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதியது. இதில் காரின் முன்பக்கம் பலத்த சேதமடைந்தது. இதில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்ட நிலையில் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த சந்திரகிரி போலீசார் இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

குடும்பத்தோடு வி.ஐ.பி. தரிசனம் வேண்டுமா? - திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

Published on 07/09/2023 | Edited on 07/09/2023

 

Tirupati Devasthanam Announcement VIP with family Want a vision

 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி, “டெங்கு, மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது, ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். சொந்த மாநில மக்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து கலவரத்தை மூட்டி உள்ளார்கள். இதுதான் சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம்” எனக் கூறியிருந்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது. பாஜக, இந்துத்துவா அமைப்புகள் போன்றவை அமைச்சர் உதயநிதிக்கு எதிராகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் அவரது பேச்சுக்கு ஆதரவான கருத்துகளும் குவிந்து வருகின்றன. 

 

இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தான அறங்காவலர் குழுவினர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராகத் தங்களது கண்டனத்தைத் தெரிவித்து, ராம நாமத்தை போல் கோவிந்த நாமத்தை ஒரு கோடி எழுதி அனுப்பும் இளைஞர்களுக்கு வி.ஐ.பி தரிசனம் ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர். 

 

திருமலை - திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தான புதிய அறங்காவலர் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அறங்காவலர் குழுத் தலைவர் கருணாகர ரெட்டி தலைமையில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் குறித்து அறங்காவலர் குழுத் தலைவர் கருணாகர ரெட்டி கூறியதாவது, “தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்திற்கு எதிராக விமர்சனம் செய்ததற்காக திருமலை - திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தான குழுவினர் சார்பில் எங்களது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

 

சனாதனம் என்பது ஒரு மதம் அல்ல. அது ஒரு வாழ்க்கை முறை. இந்த விஷயம் தெரியாமல் சனாதன தர்மம் குறித்து விமர்சனம் செய்வதால் சமூகத்தில் கலவரம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. சனாதன தர்மத்தை இந்து மக்கள் முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டிய ஒன்றாகும். இது குறித்து நாம் மக்களுக்கு பிரச்சாரங்கள் மூலம் தெரியப்படுத்த வேண்டும். இளைஞர்களிடையே இந்து சனாதன தர்மத்தை பரப்பும் நிகழ்ச்சியை ஏழுமலையான் கோவிலில் இருந்து தொடங்க உள்ளோம். அதன் ஒரு பகுதியாக, ராம நாம பாணியில் கோவிந்த நாமத்தை ஒரு கோடி முறை எழுதும் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வி.ஐ.பி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படும்.

 

மேலும், 10 லட்சத்து 1,116 முறை கோவிந்த நாமத்தை எழுதி வருவோருக்கு ஏழுமலையான் தரிசன பாக்கியம் கிடைக்கும். மேலும், சனாதன தர்மத்தை ஊக்கப்படுத்தவும், இளமைப் பருவத்திலேயே பக்தியை அதிகரிக்கவும், எல்.கே.ஜி முதல் பி.ஜி வரை படிக்கும் மாணவ - மாணவிகளுக்கு சனாதன தர்மத்தையும், மனிதாபிமானத்தையும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் பகவத் கீதையை 20 பக்கங்களில் சுருக்கிட்டு புத்தக வடிவில் அச்சிடப்பட்டு பிரசாதமாக வழங்கப்படும். அதற்காக மொத்தம் 1 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது” என்று கூறினார்.