Skip to main content

ஞாயிறன்று பிரதமர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்!

Published on 22/11/2021 | Edited on 22/11/2021

 

narendra modi

 

இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர்,  ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதிவரை நடைபெற்றது. இந்த மழைக்கால கூட்டத்தொடரில் பெகாசஸ் விவகாரம், விவசாயிகளின் போராட்டம் உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் முடக்கின.

 

அதேபோல் பல்வேறு சட்டங்கள், கடும் அமளிக்கு இடையே மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டன. எதிர்க்கட்சிகளின் அமளியைத் தொடர்ந்து, மத்திய அரசு நாடாளுமன்ற கூட்டத்தொடரை இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே முடிவுக்குக் கொண்டு வந்தது.

 

இந்தநிலையில், நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 29ஆம் தேதி தொடங்கும் என மக்களவை சபாநாயகர் கடந்த 20ஆம் தேதி அதிகாரபூர்வமாக அறிவித்தார். மேலும் அவர், அவை சுமுகமாக நடக்கும் என எதிர்பார்ப்பதாகவும், அனைத்து விஷயங்கள் குறித்தும் விவாதங்கள் நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

இந்நிலையில், நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து விவாதிக்க வரும் ஞாயிறன்று (28.11.2021) மத்திய அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த இருப்பதாகவும், இதில் பிரதமர் மோடியும் கலந்துகொள்ள இருப்பதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பிரதமர் மோடியை மறைமுகமாகத் தாக்கிப் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர்!

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
RSS leader who indirectly attacked PM Modi!

சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி, தனியார் ஊடகத்துக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் பேசியதாவது, “நான் பயலாஜிகலாக பிறக்கவில்லை என்று நம்புகிறேன். என் தாயார் உயிரோடு இருக்கும்வரை, இந்த உலகிற்கு என் தாய் மூலம்தான் வந்தேன் என நம்பிக்கொண்டிருந்தேன். ஆனால், என் தாயாரின் மரணத்திற்கு பிறகு, நான் பலவற்றை சிந்தித்துப் பார்த்தேன். இப்போது நான் அதை ஏற்றுக்கொள்ளவும் செய்கிறேன். சிலர் இதற்கு எதிராக பேசலாம். ஆனால், நான் இதை முழுமனதாக நம்புகிறேன். என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான். பயாலஜிக்கலாக நான் பிறந்திருக்க வாய்ப்பில்லை. நான் மனிதப்பிறவி அல்ல. ஏதோவொரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காக, கடவுள் என்னை இந்தப் பூமிக்கு அனுப்பியிருக்கிறார்” என்று தெரிவித்தார். அவரது பேச்சு, மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்து பிரதமர் மோடியை, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, உள்பட அனைத்து எதிர்க்கட்சியினரும் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர். 

இந்த நிலையில், பிரதமர் மோடியின் அந்த கருத்தை, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம், கும்லா பகுதியில் கிராம அளவிலான தன்னார்வலர் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “முன்னேற்றத்திற்கு எப்போதாவது ஒரு முடிவு உண்டா? நாம் நமது இலக்கை அடையும்போது, ​​இன்னும் செல்ல வேண்டியவை அதிகம் இருப்பதைக் காண்கிறோம். ஒரு மனிதன் சூப்பர்மேன் ஆக விரும்புகிறார். திரைப்படங்களில் அவர்கள் அசாதாரண சக்திகளைக் கொண்ட சூப்பர்மேனைக் காட்டுகிறார்கள். எனவே ஒரு மனிதன் அத்தகைய சக்தியைப் பெற விரும்புகிறான். 

ஆனால், அவன் அதோடு மட்டும் நிற்கவில்லை. அதன்பிறகு தேவனாக விரும்புகிறான். ஆனால் தேவதாஸ்  நம்மை விட கடவுள் பெரியவர் என்று கூறுகிறார்கள். எனவே மனிதர்கள் கடவுளாக மாற விரும்புவதாக கூறுகிறார்கள். ஆனால், பகவான் தன்னை ஒரு விஸ்வரூபம் என்கிறார். அதைவிடப் பெரியது எதுவும் இருக்கிறதா என்பது தெரியவில்லை. 

வளர்ச்சிக்கு முடிவே இல்லை. எப்பொழுதும் அதிகமானவற்றிற்கு வாய்ப்பு இருப்பதாக ஒருவர் நினைக்க வேண்டும். தொழிலாளர்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். எப்போதும் அதிகமாக பாடுபட வேண்டும். நிறைய வேலைகள் செய்ய வேண்டும். பல குழந்தைகளுக்கு நாம் கற்றுக் கொடுத்தாலும், கல்வி தேவைப்படும் என்ற புதிய தலைமுறை உருவாகி வருகிறது. வளர்ச்சி என்பது ஒரு தொடர் பணி. ஒரு தொழிலாளிக்கு நாம் இவ்வளவு செய்தோம், ஆனால் இன்னும் நிறைய இருக்கிறது என்ற உணர்வு இருக்க வேண்டும். 

Next Story

அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம்; முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன?

Published on 16/07/2024 | Edited on 16/07/2024
CM MK Stalin What did say in all party leaders meeting

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில் இன்று (16.07.2024) , காவிரி நதிநீரில் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலும், கர்நாடக அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்குக் காவிரி நீரைப் பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “ காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையினையும்,  உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினையும் பின்பற்ற மறுத்து, காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் ஆணையின்படி நமக்குக் கிடைக்க வேண்டிய குறைந்த அளவு தண்ணீரைக் கூட கர்நாடக அரசு வழங்க மறுத்து வருகிறது. இதனை முறியடித்து, தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டி, காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்குத் தண்ணீர் கிடைக்கச் செய்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைப் பற்றிப் பல ஆக்கப்பூர்வமான கருத்துக்களை இங்குத் தெரிவித்து இருக்கின்றீர்கள். அதற்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 

CM MK Stalin What did say in all party leaders meeting

தமிழ்நாட்டுக்கு சட்டப்பூர்வமாக உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, கிடைக்க வேண்டிய நீரினைச் சென்ற ஆண்டில் கர்நாடக அரசு விடுவிக்காததால், வேளாண் பெருமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தை நாடித் தான் நீரைப் பெற்றோம். இந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை சாதகமாக இருக்கக்கூடிய சூழ்நிலையிலும், கர்நாடகா அரசு இவ்வாறு நடந்து கொள்வதை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

எனவே, இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளின் அடிப்படையில், ஒருமனதாக எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவுகளைத் தீர்மானங்களாகப் படிக்கின்றேன். முதலாவதாக காவிரி நடுவர் மன்றம் 05-02-2007 அன்று அளித்த இறுதித் தீர்ப்பையும், உச்சநீதிமன்றம் 16-02-2018 அன்று அளித்த தீர்ப்பையும் அவமதிக்கும் வகையில், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு தற்போது ஆணையிட்டுள்ளவாறு தமிழ்நாட்டிற்குக் காவிரி நீரைத் தர முடியாது என்று மறுத்துள்ள கர்நாடக அரசிற்கு இந்த அனைத்து சட்டமன்றக் கட்சிக் கூட்டம் தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. 

CM MK Stalin What did say in all party leaders meeting

இரண்டாவதாகக் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்ற ஆணையின்படி, தமிழ்நாட்டிற்குக் காவிரி நீரை உடனடியாக விடுவித்திடக் கர்நாடக அரசுக்கு ஆணையிடுமாறு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தினை இந்த அனைத்து சட்டமன்றக் கட்சிக் கூட்டம் வலியுறுத்துகிறது. மூன்றாவதாகக் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்ற ஆணையின்படி, தமிழ்நாடு பெறவேண்டிய நீரை உடனடியாகப் பெறுவதற்கு, தேவைப்படின், மாண்பமை உச்சநீதிமன்றத்தை நாடி, அனைத்து சட்டப்பூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள இக்கூட்டம் ஒருமனதாகத் தீர்மானிக்கிறது. இந்தத் தீர்மானங்களின் அடிப்படையில் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் முழுமூச்சோடு மேற்கொண்டு, காவிரி டெல்டா விவசாயிகளின் உரிமைகளை இந்த அரசு நிலைநாட்டும் என உறுதியளித்து, எனது உரையை நிறைவு செய்கின்றேன்” எனத் தெரிவித்தார். இதனையடுத்து தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், திமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பி. வில்சன், ஆர்.எஸ். பாரதி, அதிமுக சார்பில் எஸ்.பி. வேலுமணி, ஒ.எஸ். மணியன், காங்கிரஸ் கட்சியின் சார்பில் கு. செல்வப்பெருந்தகை, செ. ராஜேஷ்குமார், பாமக சார்பில் ஜி.கே. மணி மற்றும் சதாசிவம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அதன் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் மற்றும் எஸ்.எஸ். பாலாஜி, பாஜகட்சி சார்பில் கரு. நாகராஜன், கருப்பு முருகானந்தம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வி.பி. நாகை மாலி மற்றும் பி. சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் டி. இராமச்சந்திரன் மற்றும் மூ. வீரபாண்டியன், மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் எம்.எச். ஜவாஹிருல்லா, புதுமடம் அலீம், கொங்கு மக்கள் தேசியக் கட்சியின் சார்பில் ஈ.ஆர். ஈஸ்வரன் மற்றும் சூரியமூர்த்தி, புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் பூவை எம். ஜெகன்மூர்த்தி, மதிமுக சார்பில் சதன் திருமலைக் குமார் மற்றும் பூமிநாதன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, நீர்வளத்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் க.மணிவாசன், அரசுத் துறைச் செயலாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.