உலக அளவில் சுற்றுச்சூழல் மாசுப்பாடு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பருவமழை பொய்த்து விட்டதால் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அதனைக் கட்டுப்படுத்தும் விதமாக உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பள்ளிகள் முதல் உயர்கல்வி நிறுவனங்கள் வரை சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் வேப்பமரங்கள் போன்ற பசுமையை காக்கும் மரங்களை உடனடியாக நட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

NEEM TREE

Advertisment

Advertisment

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் உத்தரவை மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தி கல்வி நிறுவனங்களில் ஆய்வு செய்ய வேண்டும் என மாநில அரசை கேட்டுக்கொண்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் பருவமழை பெய்வது அதிகரிக்கும், மக்கள் அனைவரும் தூய்மையான காற்றை சுவாசித்து ஆரோக்கியமாக வாழலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.